COP26 மாநாடு: சீனாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படவுள்ளதாக அறிவிப்பு

சீனாவும் அமெரிக்காவும் இணைந்து

சீனாவும் அமெரிக்காவும் இணைந்து பருவநிலை மாற்ற பிரச்சினை தொடர்பான தீர்வு நடவடிக்கைகளில் செயல்படும் என க்ளாஸ்கோவில் நடைபெற்று வரும் COP26 பருவநிலை மாநாட்டில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீப காலமாக சீனா மற்றும் அமெரிக்கா இடையே பதற்ற நிலை நிலவி வந்த சூழலில் இந்த அறிவிப்பை இரு நாடுகளும் இணைந்து ஒரு அறிக்கை ஒன்றின் மூலம் வெளியிட்டுள்ளன.

குறித்த அறிக்கையில், பாரிஸ் ஒப்பந்தத்தில் 1.5செல்சியஸ் வெப்பநிலை என்ற இலக்கை நோக்கி இருநாடும் இணைந்து செயல்படும் என்றும் வழங்கிய உறுதிப்பாட்டை மீண்டும் நினைவுகூருகின்றோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த இலக்கை அடைய இருநாட்டிற்கு இடையே இருக்கும் இடைவெளியை குறைப்பதற்கான நடவடிக்கைகளில் இருநாடும் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ilakku Weekly Epaper 155 November 07 2021 Ad COP26 மாநாடு: சீனாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படவுள்ளதாக அறிவிப்பு