இலங்கையில் கன மழை 25 பேர் உயிரிழப்பு

123 Views

இலங்கையில் கன மழை 25 பேர்

இலங்கையில் கன மழை 25 பேர் உயிரிழந்துள்ளனர். இலங்கையில் பெய்துவரும் கன மழையுடனான வானிலையினால் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களில் சிக்குண்டு இது வரையில் 25 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

17 மாவட்டங்களில் கடும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது. இதன்படி, 60,264ற்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்த 2,12,060ற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்தங்களில் உயிரிழந்தவர்களுள் நான்கு சிறார்களும், மூன்று பெண்களும் அடங்குகின்றனர். நீரில் மூழ்கி 15 பேரும், மண்சரிவில் 8 பேரும், மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி 2 பேரும் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கூறுகின்றது.

ilakku Weekly Epaper 155 November 07 2021 Ad இலங்கையில் கன மழை 25 பேர் உயிரிழப்பு

Leave a Reply