இந்திய மீனவர்களுக்கு தொடர்ந்து விளக்கமறியல் நீடிப்பு

94 Views

இந்திய மீனவர்களுக்கு தொடர்ந்து விளக்கமறியல் நீடிப்பு

எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட எல்லை தாண்டிய இந்திய மீனவர்களுக்கு தொடர்ந்து விளக்கமறியல் நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் காணொளி ஊடாக இடம் பெற்ற விசாரணைகளை அடுத்தே பருத்தித்துறை நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.

இம் மீனவர்கள் 23 பேர் சார்பிலும் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் சட்டத்தரணி லோ.குகதாஸ் ஆஜராகியிருந்தார்.

கைது செய்யப்பட்ட 23 மீனவர்களுக்கெதிராகவும் எல்லை தாண்டிய மீன் பிடியில் ஈடுபட்டமை, தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை பயன் படுத்தக்கூடிய, அனுமதி பத்திரமின்றி மீன்பிடியில் ஈடுபட்டமை போன்ற மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி நாளை வரை வழக்கை ஒத்திவைத்ததுடன் நாளை குறித்த 23 மீனவர்களையும் மன்றில் ஆஜர்ப்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார்.

இம் மீனவர்கள் வழக்கு விசாரணைகளுக்கு யாழ் இந்திய துணை தூதாக அதிகாரிகளும் சமூகமளித்திருந்தனர்.

ilakku Weekly Epaper 155 November 07 2021 Ad இந்திய மீனவர்களுக்கு தொடர்ந்து விளக்கமறியல் நீடிப்பு

Leave a Reply