செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளருக்கு எதிராக முறைப்பாடு

146 Views

செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளருக்கு எதிராக முறைப்பாடு

செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளருக்கு எதிராக முறைப்பாடு: வவுனியா குருமன்காடு காளி கோவிலுக்கு அருகிலுள்ள நகர சபையின் கட்டுப்பாட்டுப் பகுதியில் சட்டவிரோத கட்டடம் கட்டப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து செய்தி சேகரிப்பதற்கு சென்ற வவுனியா ஊடகவியலாளர் பரமேஸ்வரன் கார்த்தீபனுக்கு எதிராக வவுனியா  காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு ஒன்று இன்று செய்யப்பட்டு வாக்கு மூலம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா குருமன்காடு காளி கோவிலுக்கு அருகில் நகரசபைக்குச் சொந்தமான பகுதியில் அனுமதி பெற்றுக்கொள்ளாமல் கட்டடம் கட்டப்பட்டு வருவதுடன் அதனைச் சூழவுள்ள பகுதிகள் துப்பரவு செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பான தகவல் ஊடகவியலாளர் ப. கார்த்தீபனுக்கு கிடைத்துள்ளது.

இது குறித்த மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்வதற்கு சென்றபோது அங்கு சிலர் கட்டடம் அமைக்கும் பணிகளை மேற்கொண்டனர். அவர்களிடம் இங்கு கட்டடம் அமைப்பதற்கு அனுமதி பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதா என்ற தகவல்களை கேட்டறிந்த ஊடகவியலாளரிடம் அங்கிருந்தவர்கள் முறைப்படி அனுமதி பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

FB IMG 1636377086149 செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளருக்கு எதிராக முறைப்பாடு

இந்நிலையில் அங்கு இடம்பெற்றுவரும் கட்டடப் பணிகளை உடன் நிறுத்துமாறு கோரும் நீதிமன்ற தடை உத்தரவு இன்று பிற்பகல் நகரசபையினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந் நிலையில் பிற்பகல் 2 மணியளவில் குறித்த இடத்திற்கு நேற்று செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் அங்கு பணியாற்றியவர்களுக்கு அச்சுறுத்தி இடையூறு எற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து அப்பகுதியிலுள்ள பள்ளி வாசல் நிர்வாகத்தினால் வவுனியா காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டு ஊடகவியலாளரிடம் காவல்துறையினர் வாக்கு மூலத்தினையும் பதிவு செய்துள்ளனர். இதன்போது  பள்ளிவாசல் நிர்வாகத்தினருடன் நகரசபை உறுப்பினர்களான லரீப் மற்றும் அப்துல் பாரி பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ilakku Weekly Epaper 155 November 07 2021 Ad செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளருக்கு எதிராக முறைப்பாடு

Leave a Reply