குரங்கில் இருந்து பரவிய வைரஸ் தாக்கி சீனாவில் ஒருவர் பலி

7d98f1f083bd488d8bf6919c319fc7db குரங்கில் இருந்து பரவிய வைரஸ் தாக்கி சீனாவில் ஒருவர் பலி

சீனாவில் பரவிய கொரோனா நோயால் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் நிலையில், குரங்கிடம் இருந்து பரவிய வைரசால் ஒருவர் பலியாகி இருப்பது அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பரவி வருகிறது. அந்த வைரஸ் விலங்குகளிடம் இருந்து மனிதனுக்கு பரவியதாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் குரங்கிடம் இருந்து மனிதனுக்கு பரவிய ஒருவகை வைரசால் வன விலங்கு ஆய்வுகூட ஊழியர் பலியாகி இருக்கிறார்.

கடந்த மார்ச் மாதம் 2 குரங்குகள் திடீரென இறந்துள்ளன. அவற்றை விலங்கு ஆய்வு கூடத்தில் பிரேத பரிசோதனை செய்தனர். அப்போது அதில் 53 வயது ஊழியர் ஒருவரும் பங்கேற்றார்.

சில நாட்கள் கழித்து அவருக்கு உடல் நிலை கோளாறு ஏற்பட்டது. அவரை சோதித்த போது அவரது உடலில் ‘ B வைரஸ்’ எனும் குரங்குகளை தாக்கும் ஒருவகை வைரஸ் பரவி இருந்தது தெரிய வந்தது.

இலக்கு இந்த வார மின்னிதழ் 139

ilakku-weekly-epaper-139-july-18-2021