மலையக சிறுமி ஹிசாலினியின் மரணத்திற்கு நீதி வேண்டும்

மலையக சிறுமி ஹிசாலினியின்  மரணத்திற்கு நீதியான விசாரணை செய்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று மன்னார் மாவட்ட மாதர் ஒன்றிய தலைவி திருமதி மகாலட்சுமி குருசாந்தன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்

பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் அவர்கள் இல்லத்தில் பவீட்டு வேலை செய்து வந்த மலையகத்தை சார்ந்த ஹிசாலினி எனும் 16 வயது சிறுமி சில நாட்களுக்கு முன்னர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்திருந்தார்.

இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே மகாலட்சுமி குரு சாந்தன் அவர்கள் இன்றைய  தினம் இவ்வாறு தெரிவித்திருந்தார். மேலும் மரணித்த சிறுமி பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டுள்ளதாக மரண விசாரணை அறிக்கை தெரிவித்துள்ளது என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

அதனால் எந்த இனத்தை சார்ந்த பெண்ணாக இருந்தாலும் இந்த சிறுமியின் மரணத்திற்கு  நீதியான விசாரணை தேவை பாலியல் துன்புறுத்தல்கள் நடை பெற்றுள்ளதாக  தெரிவிக்கப் பட்டுள்ளது. ஒரு உயிர் போகுமளவிற்கு கொடூரமான வேலை செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும்.

இந்த விடயத்தில் சிறுவர்கள் பெண்களுக்காக குரல் கொடுக்கும் எங்கள் அமைப்பு ஒரு நாளும் பின் நிற்க மாட்டோம். இதற்கான விசாரணையானது பல கோணங்களில் நடத்தப்பட வேண்டும்.

நீதிக்காக போராடும் எவரும் இந்த விடயத்தில் விலை போகக் கூடாது நாட்டின் பெண்களுக்கு எதிராக  நடக்கின்ற வன்முறைகளால்  பெண் சமுதாயம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கின்றது.

எனவே  சிறுமிகளை பெண்களை பாலியல் வன்கொடுமைகள் செய்பவர்களையும் சமூக வலைத் தளங்களின் மூலம் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கு பவர்களையும்  தராதரம் பாராது சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு என்று மன்னார் மாவட்ட மாதர் ஒன்றிய தலைவி திருமதி மகாலட்சுமி குருசாந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 139

ilakku-weekly-epaper-139-july-18-2021