சீனாவை கடும் புயல் தாக்கியதில் 22 பேர் பலி, மில்லியன் மக்கள் இடம்பெயர்வு
சீனாவை லெகிமா எனப் பெயரிடப்பட்ட புயல் காற்று தாக்கியதில் 22 பேர் கொல்லப்பட்டதுடன், ஒரு மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக சீனா தகவல்கள் தெரிவிக்கின்றன.
புயல் காற்றினால் நேற்று (10) காலை இடம்பெற்ற நிலச்சரிவிலேயே பலர்...
ஆளில்லா உளவு விமானத்தை சோதனை செய்த ரஷ்யா
ரஷ்ய அரசு அதிக வலுவுள்ள ஆளில்லா வேவு விமானத்தை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. “ஓகோட்னிக்” என்று பெயரிடப்பட்ட இந்த உளவு விமானம், புறப்பாடு, நடுவானில் பயணிக்கும் போது இறங்குவது போன்ற கோதனைகளை அடக்கிய வீடியோவை...
செவ்வாய் கிரகத்தில் களிமண் துகள்கள்
செவ்வாய் கிரகத்தில் களிமண் துகள்கள் இருப்பதாக கியூரியாசிற்றி ரோவர் கண்டுபிடித்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, செவ்வாய்க் கிரகத்தில் ஆராய்ச்சி செய்ய கடந்த 2012ஆம் ஆண்டு தரையிறங்கியது. பூமிக்கு அடுத்து,...
ஜப்பானில் பறக்கும் கார்கள்
ஜப்பானில் பெருகி வரும் சாலை போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் பறக்கும் கார்களை உருவாக்குவதில் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளன. 2023ஆம் ஆண்டுக்குள் பொருட்களை ஏற்றிச் செல்லும் பறக்கும் கார்களையும், 2030ஆம்...
காஸ்மீர் மக்களின் போராட்டத்திற்கு இறுதி வரை பாக்கிஸ்தான் இராணுவம் ஆதரவளிக்கும்
காஸ்மீர் விவகாரத்தில் எந்தளவிற்கு செல்வதற்கும் தயார் என பாக்கிஸ்தானின் இராணுவதளபதி ஜாவெட் பஜ்வா தெரிவித்துள்ளார்.
காஸ்மீரில் இந்தியா மேற்கொண்டுள்ள மாற்றங்களை முறியடிப்பதற்காக எந்தளவிற்கும் செல்ல தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
காஸ்மீர் மக்களின் போராட்டத்திற்கு இறுதி...
நெருப்போடு விளையாடுபவர்கள் அதிலேயே அழிந்து போவார்கள் – சீனா
நெருப்போடு விளையாடுபவர்கள் அதிலேயே அழிந்து போவார்கள் என ஹாங்காங் போராட்டக்காரர்களை சீனா எச்சரித்துள்ளது. ஹாங்காங்கில் குற்றம் சாட்டப்படுவோரை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்கும் மசோதா இடைக்காலமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டபோதும், அதை முழுமையாகக் கைவிட...
இந்தியாவின் நடவடிக்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் முறையிடு: இம்ரான்கான்
பாகிஸ்தான்: ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நடவடிக்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் முறையிட இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டதுடன்...
முன்னாள் இந்திய அமைச்சர் சுஸ்மா சுவராஜ் மரணம் – வே.இராதாகிருஸ்ணன் இரங்கல்
முன்னாள் இந்திய மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
சிறுநீரக நோயாளியான சுஷ்மாவிற்கு 2016இல் சிறுநீரகங்கள் செயலிழந்தன. டெல்கி “எயிம்ஸ்“ மருத்துவமனையில், அவருக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய்பட்டது....
இந்திய பாகிஸ்தான் போர்
காஷ்மீரின் நீலம் பள்ளத்தாக்கில், இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டிற்கு அப்பால் கொத்து எறிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியதில் ஒரு குழந்தை உட்பட இருவர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான்...
வளைகுடாவில் இன்னுமொரு எண்ணெய்க் கப்பலை ஈரான் சிறைப்பிடித்தது
வளைகுடா பகுதியில் ஈரான் மற்றொரு எண்ணெய்க் கப்பலை சிறைப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது அரபு நாடு ஒன்றிற்கு சொந்தமானது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த நாட்டிற்குரியது என்பது பற்றி அறிவிக்கப்படவில்லை.
இந்தக் கப்பலில் 7இலட்சம் லீற்றர்...










