எதிர்க்கட்சி தலைவர் சஜித் இந்தியாவுக்குப் பயணம்!
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு திங்கட்கிழமை (3) டில்லியை சென்றடைந்தார். தனது 3 நாட்கள் டில்லி விஜயத்தில் பல முக்கிய சந்திப்புக்களிலும், கலந்துரையாடல்களிலும் எதிர்க்கட்சி தலைவர் கலந்து கொள்ளவுள்ளதாக...
செம்மணி மனிதப் புதைகுழி அடுத்த வருடம் மீண்டும் அகழ்வுப் பணிகள்…
செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழிப் பகுதிகள் மழை நீரால் நிரம்பியுள்ளதால் மீண்டும் அகழ்வுப் பணிகள் அடுத்த வருடம் ஜனவரி மாதத்திற்குப் பின்னரே ஆரம்பிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
செம்மணி சித்துபாத்தி மனிதப் புதைகுழி வழக்கு...
தமிழர் விடயத்தில் அரசாங்கம் பாகுபாடு காண்பிப்பதாக சி.வி.விக்னேஸ்வரன் சாடல்
அரசாங்கம் காணி அபகரிப்பு தொடர்பில் முன்னைய ஆட்சியாளர்களின் அதே மனோநிலையில் இருப்பதாகவே தென்படுகிறது என்று முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று (03) வெளியிட்ட ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
“வடக்கு மாகாணத்தில்...
வடக்கு கடற்பரப்பு ஊடாக இடம்பெறும் அத்துமீறல்கள் அதிகரிப்பு
இராமேஸ்வரத்திலிருந்து மன்னாருக்கு படகு மூலம் வந்த இலங்கையைச் சேர்ந்த வர்த்தகர் உட்பட நால்வரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
மன்னாரைச் சேர்ந்த குறித்த வர்த்தகர், தனக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்கு நடவடிக்கைகள் தொடர்பான...
மாகாண சபை தேர்தல் குறித்து மாறுபடும் அரசாங்கத்தின் நிலைப்பாடு!
மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பான கலந்துரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவு எட்டப்பட மாட்டாது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
தேர்தல் முறைமை குறித்து தீர்மானம் எட்டப்பட்ட பின்னரே மாகாண சபைத்...
செம்மணி மனித புதைகுழியில் சிறுவர்களை புலிகள் புதைத்ததாக கூறி விசாரணைகளை மூடி மறைக்க அரசாங்கம் திட்டம்!
செம்மணி மனித புதைகுழியில் சிறுவர்கள், குழந்தைகளுடைய எலும்புக்கூடுகள் வெளிவந்துள்ள நிலையில், புலிகள் அவற்றை புதைத்ததாக கூறி இந்த அரசாங்கம் விசாரணைகளை பின்னடிக்க பார்ப்பதாக சம உரிமை இயக்கத்தின் செயற்பாட்டாளர் சன்னி ஞாஞானந்த தேரர்...
இந்தியாவும் அமெரிக்காவும் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்து!
அடுத்த 10 ஆண்டுகளுக்கு பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் ஓர் ஒப்பந்தத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் கையெழுத்திட்டுள்ளன.
கோலாலம்பூரில் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் மற்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இடையேயான...
ஐ.நா.சைபர் சாசனத்தில் இலங்கை கைச்சாத்து…
ஐக்கிய நாடுகள் சபையின் சைபர் குற்றங்களுக்கு எதிரான சாசனத்தில் இலங்கை கையொப்பமிட்டுள்ளது.
இதன்மூலமாக தெற்காசிய நாடுகளில் குறித்த சாசனத்தில் கையொப்பமிடும் இரண்டாவது நாடாகவுள்ள இலங்கையின் சார்பாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் பதில் செயலாளர் வருண...
47 ஆவது நாட்களாக தொடரும் திருகோணமலை விவசாயிகள் போராட்டம்!
திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் தங்களுக்கு தீர்வு வேண்டி தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தை இன்றும் 47 ஆவது நாட்களாக திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த பகுதி விவசாயிகளின் 352 குடும்பங்களின்...
பாடசாலை நேர நீடிப்புக்கு அதிபர்கள் சங்கம் எதிர்ப்பு!
பாடசாலை நேர நீடிப்பு தீர்மானம் ஒரு பொருத்தமற்ற முடிவு என்று தரப்படுத்தப்பட்ட அதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் நிமல் முதுன்கொட்டுவ தெரிவித்துள்ளார்.
உரிய கலந்தாலோசனை செய்து தீர்மானம் எடுக்காது விட்டால் , எதிர்காலத்தில் தொழிற்சங்க...










