பொருளாதார நெருக்கடியில் பாதுகாப்புச் செலவினம் எழுப்பியுள்ள கேள்வி – பி.மாணிக்கவாசகம்

இலங்கையில் உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடி பல்வேறு விடயங்களிலும் பல்வேறு துறைகளிலும் பல வழிகளில் தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றன. பல்வேறு சிந்தனைகளையும் ஊக்குவித்து வருகின்றன. ஒரு வகையில் பழைய மரபுவழி அரசியல் சிந்தனையையும்கூட அது...

ஜெனீவா – தற்காப்பு நிலையில் இலங்கை? – அகிலன்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத் தொடர்  திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை விவகாரம் சூடுபிடித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் சாா்பில் இரண்டு சிரேஷ்ட அமைச்சா்கள் ஜெனீவா விரைந்துள்ளாா்கள். இலங்கை குறித்த...

‘ஈழமக்களின் 1972 வரையான மீயுயர் இறைமையாளர் மேதகு 2வது எலிசபேத் மகாராணி காலமானமைக்கு இரங்குகிறோம்’

பிரித்தானிய அரசின் மகாராணியாக அதன் அரசவரலாற்றிலேயே மிக நீண்டகாலம் 70 ஆண்டுகள் விளங்கிய மேதகு 2வது எலிசபேத் மகாராணி அவர்கள் தனது 96வது வயதில் காலமான பிரிவுத்துயரில், பிரித்தானியத் தமிழர்கள் சார்பாகவும், ஈழத்தமிழர்கள்...

அற்ப சலுகைகளுக்கு விலைபோகக் கூடாது-துரைசாமி நடராஜா

உரிமைகள் முக்கியத்துவம் மிக்கதாக விளங்கும் நிலையில் இவற்றை பெற்றுக் கொள்வதற்கு ஐக்கியம் அவசியமாகும்.இது இல்லாத நிலையில் பாதிப்புகள் ஏற்படுவதை தடுத்து நிறுத்த முடியாது. அத்தோடு இலங்கையின் மலையக சமூகத்தை பொறுத்தவரையில் தேவைகளின் பட்டியல்...

மட்டக்களப்பில் காட்டு யானைகளின் அட்டகாசம்-மட்டு.நகரான்

கிழக்கு மாகாணம் தமிழர்கள் தொடர்ச்சியாக வேதனைகளைச் சுமந்த மாகாணமாக காணப்படுகின்றது. இயற்கை அனர்த்தங்கள், செயற்கை அனர்த்தங்கள் என தொடர்ச்சியாக அழிவுகளை எதிர்கொண்ட பகுதியாகவே கிழக்கு மாகாணம் இருந்துவருகின்றது. அதிலும் கிழக்கு மாகாணத்தில் 75 வீதத்திற்கு...

 மீண்டும் அரசியலில் இறங்குவாரா கோட்டா?-அகிலன்

தாய்லாந்தில்   தங்கியிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ  வெள்ளிக்கிழமை இரவு இலங்கை திரும்பி இருக்கின்றார். இந்த நிலைமையில் அவரை மீண்டும் அரசியலில் ஈடுபடுத்துவதற்காக பொதுஜன பெரமுனவின் ஒரு குழுவினர் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு...
ஈழத் தமிழர் சுயநிர்ணய உரிமை

அனைத்துலக வலிந்து காணாமலாக்கப்பட்டுப் பாதிப்புற்றோர் தினத்தில் தமிழினமே நீதிக்காக ஓரணியில் எழுந்துநில்!

2000 த்திற்கும் மேற்பட்ட நாட்களாக 138 உயிரிழப்புகளுடன் உறுதியுடன் நீதிக்காகப் போராடும் பாதிப்புற்ற கிட்டிய குடும்ப உறுப்பினர்களுக்கு ஆதரவளி-  மூத்த அரசியல் ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன். சிறிலங்கா அராசங்கம் ஈழத்தமிழ் மக்கள் மேல் மேற்கொண்ட...

ஜனநாயக கோட்பாடுகளுக்கு மதிப்பளிக்காத பயங்கரவாத தடைச் சட்டம் – துரைசாமி நடராஜா

இலங்கை அரசு பயங்கரவாத தடைச் சட்டத்தைதைப் பயன்படுத்தி கைது நடவடிக்கைகளை விரிவுபடுத்தி வருகின்றமை தொடர்பில் விசனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.   இச்சட்டத்தின் ஊடாக நாட்டில் ஜனநாயகத்தையும், ஊழலற்ற அரசியல் கலாசாரத்தையும் கட்டியெழுப்பும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட...

அனைத்துலக வலிந்து காணாமலாக்கப்பட்டுப் பாதிப்புற்றோர் நாளில், “தமிழ் தேசிய சக்திகள் கிழக்கில் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்”

தமிழர்களின் விடுதலைப் போராட்டங்களானது பல்வேறு வலிகளையும் வேதனைகளையும் சுமந்த போராட்டங்களாகும். இந்த போராட்டங்கள் பல குடும்பங்களின் கண்ணீராக தொடரும் நிலையினையும் ஏற்படுத்தியுள்ளது. இழப்புகளை எதிர்கொள்ளாத சமூகம் சுதந்திரத்தினை அடையமுடியாது என்பது பொதுவான கருத்துகளாக...

நீதிக்காக இன்னும் எத்தனை நாட்களுக்குப் போராடுவது? – பி.மாணிக்கவாசகம்

இலங்கையில் வலிந்து ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் ஓர் எரியும் பிரச்சினையாக சுமார் 40 வருடங்களாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. தமிழ் மக்களுக்கு எதிராக இன அழிப்பு நோக்கத்துடன் 1983 ஆம் ஆண்டு கட்டவிழ்த்துவிடப்பட்ட கறுப்பு ஜுலை வன்முறைகளில் இருந்து நாட்டில் பெரும் எண்ணிக்கையிலான தமிழர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டிருப்பதாகக் கணிக்கப்பட்டிருக்கின்றது.குறிப்பாக தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்காகத் தலையெடுத்த ஆயுதப் போராட்டத்தை முறியடிப்பதற்காக ஆட்களைக் காணாமல் செய்வதை ஒரு தாக்குதல் உத்தியாக ஆட்சியாளர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். அரசுக்கு எதிரான போராட்டத்தில் தீவிர பங்கேற்கின்ற கிராமிய மற்றும் பிரதேச மட்டத்திலான குடிநிலைசார் தலைவர்கள் முக்கியஸ்தர்களுடன் முக்கியமாக இளைஞர் யுவதிகளும் முதலில் இலக்கு வைக்கப்பட்டனர். அவர்கள் கைது செய்யப்பட்டார்கள். கடத்தப்பட்டார்கள். பின்னர் காணாமல் ஆக்கப்பட்டார்கள். இதனைவிட விபரம் அறிய முடியாத முறையில் ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றிருக்கின்றன. யுத்தம் முடிவடைந்த தருணத்தில் பொதுமன்னிப்பளிக்கப்படும் என்ற உத்தரவாதத்துடன் இராணுவத்திடம் சரணடையுமாறு அரசாங்கம் ஒலிபெருக்கிகள் மூலம் விடுத்த கோரிக்கையை ஏற்று சரணடைந்த நூற்றுக்கணக்கான முன்னாள் போராளிகளும் காணாமல் போயுள்ளார்கள். இவர்களுக்கு என்ன நடந்தது என்பதைத் தெரிவிப்பதற்கு ஆட்சியாளர்கள் மறுத்து வருகின்றனர். கைது செய்யப்பட்டும் கடத்திச் செல்லப்பட்டும் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் பற்றிய விபரங்கள் ஆதாரங்களாக இருந்த போதிலும், அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு அரசுகள் இன்னும் பொறுப்பேற்கவில்லை. 'வலிந்து காணாமல் ஆக்கப்படுவதற்கு அரசாங்கம் மன்னிப்பு வழங்குகின்ற செயற்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும். ஆட்களை வலிந்து காணாமல் ஆக்குகின்ற குற்றச் செயல்கள் இனிமேல் தொடராமல் தடுக்க வேண்டும்'...

இணைந்திருங்கள்

5,469FansLike
813FollowersFollow
503SubscribersSubscribe

அதிகம் பார்க்கப்பட்டவை