பாலஸ்தீனத்தைப் போல தமிழீழத்தையும் அங்கீகரிக்குமா நோர்வே? – ஆர்த்தீகன்

a1 2 பாலஸ்தீனத்தைப் போல தமிழீழத்தையும் அங்கீகரிக்குமா நோர்வே? - ஆர்த்தீகன்பாலஸ்தீனத்திற்கான அங்கீகாரத்தை நோர்வே, அயர்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடந்த புதன்கிழமை (22) அறிவித்துள்ளன. ரஸ்யாவும் 1988 ஆம் ஆண்டு மேற்கொண்ட தனது முடிவில் மாற்றமில்லை என அறிவித்துள்ளது. அதாவது சுதந்திர பாலஸ்தீனம் என்ற தீர்வுக்கான அங்கீகாரம் அது. நோர்வேயின் அறிவிப்பைத் தொடர்ந்து மோல்ட்டா, ஸ்லோவேனியா மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளும் தமது அங்கீகாரத்தை வழங்கலாம் என கூறப்படுகின்றது.

ரஸ்யாவின் நாடாளுமன்றப் பேச்சாளர் கூறுவது போல பாலஸ்தீனம் என்ற நாட்டுக்கான அங்கீகாரம் என்பது 1967 ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட எல்லைகளின் அடிப்படையாக கொண்டது. ஆனால் இந்த நாடுகளின் முடிவை இஸ்ரேல் கடுமையாக எதிர்க்கின்றது. இந்த நாடுகள் ஹமாஸிற்கும், ஈரானுக்கும் வெற்றியை கொடுக்க முனைகின்றன, இது பயங்கரவாதத்திற்கு கிடைத்த வெற்றி என்ற வாதங்களை இஸ்ரேலின் வெளிவிவகார அமைச்சர் முன்வைத்தாலும் அது தற்போதைய உலக அரங்கில் அதிக கவனத்தைப் பெறவில்லை. ஏனெனில் இஸ்ரேலிய அமைச்சர் பேசிமுடித்த சில நிமிடங்களில் ஸ்பெயின் தனது அங்கீகாரத்தை வெளியிட்டிருந்தது.

இந்த நாடுகளின் அறிவிப்புக்கு அப்பால் சில வாரங்களுக்கு முன்னர் ஐக்கிய நாடுகள் சபையில் இடம்பெற்ற பாலஸ்தீனத்திற்கான நிரந்தர உறுப்புரிமை தொடர்பான வாக்கெடுப்பில் உலகில் உள்ள 193 நாடுகளில் 143 நாடுகள் ஆதரவாக வாக்களித்தது என்பது உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள் அதற்கான அங்கீகாரத்தை வழங்கியதாகவே கொள்ளப்படுகின்றது. சீனா, இந்தியா, மெக்சிகோ, இந்தோனேசியா, பிரேசில், தென்னாபிரிக்கா மற்றும் துருக்கி உட்பட ஜி-20 பொருளாதாரக் கூட்டமைப்பில் உள்ள அரைவாசிக்கு மேற்பட்ட நாடுகள் பாலஸ்தீனத்திற்கான அங்கீகாரத்தை ஏற்கனவே வழங்கியுள்ளன.

a2 2 பாலஸ்தீனத்தைப் போல தமிழீழத்தையும் அங்கீகரிக்குமா நோர்வே? - ஆர்த்தீகன்ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 27 நாடுகளில் 7 நாடுகள் பாலஸ்தீனத்தை 1988 ஆண்டு அங்கீகரித்தபோதும் சுவீடன் 2014 ஆம் ஆண்டு அங்கீகரித்திருந்தது. லத்தீன் அமெரிக்க நாடுகளில் பல பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளபோதும், கொலம்பியா ஒருபடி மேலே சென்று மேற்குக்கரையில் உள்ள ரமலா பகுதியில் தனது தூதரகம் ஒன்றை திறக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

அந்த அங்கீகாரம் மற்றும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் கடந்த வாரம் வெளியிட்டுள்ள இஸ்ரேலிய பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் உட்பட 3 ஹமாஸ் தலைவர்கள் மீதான தீர்ப்பு என்பன மேற்குலகம் மிகப்பெரும் அழுத்தம் ஒன்றிற்குள் இருப்பதையே காட்டுக்கின்றது. விரும்பியோ விரும்பாமலோ மேற்குலக கூட்டணியில் உள்ள நாடுகளை அவர்களின் முதலாளியான அமெரிக்காவையும் மீறி சில நகர்வுகளை மேற்கொள்ள வேண்டிய கட்டத்திற்குள் தற்போதைய புதிய உலக ஒழுங்கு கொண்டுவந்து நிறுத்தியுள்ளது.

a3 1 பாலஸ்தீனத்தைப் போல தமிழீழத்தையும் அங்கீகரிக்குமா நோர்வே? - ஆர்த்தீகன்தற்போதைய நகர்வை நோர்வே தான் முன்னெடுத்துள்ளது. அது ஆச்சரியமானது அல்ல ஏனெனில் 1993 ஆம் ஆண்டு பாலஸ்தீனம் தொடர்பில் ஒஸ்லோ உடன்பாட்டை அதுவே முன்னெடுத்திருந்தது. பாலஸ்தீன விடுதலை இயக்கத்தையும் அந்த மக்களின் பிரதிநிதியாக ஏற்றுக்கொண்டிருந்தது. இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் அவர்களுக்கான அதிகாரத்தையும் நிறுவியிருந்தது. அந்த நகர்வு அன்றைய பூகோள அரசியல் சூழ்நிலைகள் கருதி எடுக்கப்பட்டிருந்தாலும், தற்போது மீண்டும் மாறிவரும் பூகோள அரசியல் சமநிலையையை கருத்தில் கொண்டு அதனை எடுக்கவேண்டிய நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.

அதாவது காசாவில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் தாக்குதல்கள் மற்றும் அங்கு ஏற்பட்டுவரும் மனிதப்பேரவலம் ஆகியவற்றை இந்த உலகம் நேரிடையாக பார்த்துக்கொண்டு நிற்கின்றது. மத்தியகிழக்கில் தெருச்சண்டியனாக வளர்த்துவிடப்பட்ட இஸ்ரேல் தற்போது அமெரிக்காவுக்கும், நேட்டோவிற்கும் பாரமாக மாறியுள்ளதாக கூறுகின்றது ஒரு மேற்குலக ஊடகம். இஸ்ரேலின் தற்போதைய போர் மத்திய கிழக்கு, ஆபிரிக்க மற்றும் மேற்கு ஆசிய நாடுகளில் அமெரிக்காவின் ஆழுமையை கடுமையாக பாதித்து வருகின்றது. எனவே தான் அமெரிக்காவின் அமைதி முகமான நோர்வே களத்தில் குதித்துள்ளது.

a4 1 பாலஸ்தீனத்தைப் போல தமிழீழத்தையும் அங்கீகரிக்குமா நோர்வே? - ஆர்த்தீகன்ஆனால் இந்த தடவை அவர்களால் ஏமாற்றுவது என்பது கடினமானது. அதனை தான் உக்ரைன் போரும், பாலஸ்தீனப்போரில் ஏழு மாதங்கள் கடந்தும் மேற்குலகத்தின் முழுமையான ஆதரவுகளுடன் ஹமாஸ் அமைப்பை அழிக்கவோ, அவர்களை சரணடைய வைக்கவோ இல்லையெனில் பாலஸ்தீன மக்களை அவர்களிடம் இருந்து பிரிக்கவோ இஸ்ரேலினால் முடியவில்லை என்ற நிகழ்வுகள் காட்டுகின்றன.

தனது மூன்று புதல்வர்களை ஒரே தாக்குதலில் இழந்தபோதும் ஹமாஸின் தலைவர்கள் தமது நிலையில் இறுக்கமாகவே உள்ளனர். 36,000 மக்கள் கொல்லப்பட்டு 80 விகிதத்திற்கு மேற்பட்ட வாழ்விடங்கள் அழிக்கப்பட்டு, உணவைக்கூட ஆயுதமாக பயன்படுத்தி பட்டிச்சாவு வந்தபோதும் அந்த மக்கள் தமது மண்ணைவிட்டு ஓட விரும்பவில்லை.

a5 பாலஸ்தீனத்தைப் போல தமிழீழத்தையும் அங்கீகரிக்குமா நோர்வே? - ஆர்த்தீகன்யாரும் ஹமாஸ் படையினர் செய்தது தவறு என்று அங்கு கூறவுமில்லை. தமது உரிமையையும், இறைமையையும் விட்டுக்கொடுக்காது நிற்கின்றனர். அந்த உறுதி தான் மேற்குலகத்தின் பல கூட்டணி நாடுகளை அசைத்துள்ளது.
இதனிடையே, தமிழீழத்தின் அங்கீகாரத்திலும் நோர்வேக்கு பங்குண்டா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

1993 ஆம் ஆண்டு பாலஸ்தீனத்திற்கு அங்கீகாரம் வழங்கி பேச்சு மேடைக்கு அழைத்துச் சென்றது போலவே தமிழீழவிடுதலைப் புலிகளையும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக அங்கீகரித்து, தமிழ் மக்களின் ஆட்சி அதிகாரத்தை ஏற்றுக்கொண்டு இரு நாடுகள் என்ற நிலையில் நோர்வே தனது பேச்சுக்கான முயற்சியை ஆரம்பித்திருந்தது.

அன்றைய பூகோள அரசியல் சூழ்நிலையில் இந்தியா என்ற பிராந்திய வல்லரசின் உள்நுளைனவும், அமெரிக்காவின் அரசியல் காய்நகர்த்தல்களும் அன்று தமிழ் மக்களுக்கு பாதகமாக இருந்ததால் நாம் கடுமையான நெருக்கடிகளுக்கு உள்ளானோம். ஆனால் இன்று அந்த சூழ்நிலை மாறிவிட்டது.

அதனை இந்த வருடம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளில் ஒரளவு உணரக்கூடியதாக உள்ளது. தமிழ் மக்கள் சுயாமாக முடிவெடுத்து இலங்கை அரசியலில் இருந்து ஒதுங்கப்போவதாக அவர்கள் உணரத்தலைப்பட்டுள்ளதும், இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் எற்பட்டுள்ள நெருக்கடியும் அதற்கு காரணமாகலாம். எனினும் நாம் எதுவுமே செய்யாமல் விழாக்களையும், நினைவு நிகழ்வுகளையும் மட்டும் கொண்டாடிக்கொண்டு இருப்பதால் எதுவும் நடந்துவிடாது.

a6 பாலஸ்தீனத்தைப் போல தமிழீழத்தையும் அங்கீகரிக்குமா நோர்வே? - ஆர்த்தீகன்2002 ஆம் ஆண்டு ஏற்பட்ட சமாதான காலத்தில் எம்மை ஒரு தேசமாக மதித்து தமிழீழ காவல்துறைக்கு பயிற்சி கொடுத்த அயர்லாந்து கடந்த வாரம் பலாஸ்தீனத்தை அங்கீகரித்த நாடுகளில் ஒன்று. சமாதான காலத்தில் தமிழீழத்தை ஒரு நாடாக கருதி வாத்தக உடன்பாடு தொடர்பில் அன்றைய தமிழீழ அரசியல்த்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனுடன் பேச்சக்களை நடத்தியிருந்தது சீனா.

தமிழீழ நடைமுறை அரசு இருந்த காலத்தில் தென்னாபிரிக்கா, எரித்திரியா என்று பல நாடுகளுடன் எமக்கான தொடர்புகள் பலமாகவே இருந்தன. ஆனால் அவை அனைத்தும் ஒருசில நாடுகளில் உள்ள அமைப்புக்களின் தன்னலப்போக்குகளினால் இன்று இழக்கப்பட்டுள்ளது.

பாலஸ்தீனத்தை அங்கீகரித்த 143 நாடுகளைப்போல எமக்கான ஆதரவுகளைத்தேடும் இரஜதந்திர நகர்வுகளை நாம் மேலும் விரிபுபடுத்த வேண்டும். ஒரு சில நாடுகள் கொண்டுவரும் தீர்மானங்கள், சில நாடுகளின் தலைவர்களும், அரசியல்வாதிகளும் வெளியிடும் அறிக்கைகளுக்கு மயங்கி எமது பயணத்தை நிறுத்தாது தொடரும் மனப்பக்குவமும் உறுதியும் வேண்டும்.

அறிக்கைகள், தீர்மானங்கள், ஆசை வார்த்தைகள் எமக்கு முன்னால் முன்வைக்கப்படும் ஆனால் அவை தான் எமக்கான தீர்வு அவர்கள் தான் எமக்கான தீர்வை வழங்கப்போகின்றார்கள் என நம்புவோமாக இருந்தால் அல்லது அது தொடர்பில் மக்களை நம்ப வைப்போமாக இருந்தால் மீண்டும் 15 வருடங்கள் இலகுவாக கடந்து சென்றுவிடும்.