புற்று நோயை உண்டாக்கும் எண்ணெய்களும், விற்றமின்களும் | ஆர்த்திகன்

புற்று நோயை உண்டாக்கும் எண்ணெய்ஆர்த்திகன்

புற்று நோயை உண்டாக்கும் எண்ணெய்களும்

புற்றுநோய் என்பது உலகில் அதிக மரணத்தை ஏற்படுத்தும் நோய்களில் ஒன்றாக மாறிவருகின்றது. அந்த நோயை குணப்படுத்தும் பணிகளில் மருத்துவ உலகம் போராடி வருகையில், அதனை ஏற்படுத்தும் காரரணிகள் தொடர்பில் ஆய்வாளர்கள் தமது பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். எனினும் உறுதியான காரணிகளை அறிவது சவாலான விடயமாகவே உள்ளது.

சமையலுக்கு பயன்படுத்தும் சில எண்ணெய் வகைகளில் புற்றுநோயை ஏற்படுத்தும் பரம்பரை மூலக்கூறுகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. சூரியகாந்தி, சோயா, சோளம் மற்றும் பாம் எண்ணெய் வகைகளில் பொரிக்கப்படும்  உணவுகளில் கடும் வெப்பம் காரணமாக பல நச்சுப்பொருட்கள் உருவாகின்றன.

இதன்போது உருவாகும் அல்டிகைட் (Aldehydes) என்ற வேதியல் பொருள் புற்றுநோயை உருவாக்கும் தன்மை கொண்டது. இது பின்னர் Retinaldehyde ஆகவும், அதன் பின்னர் Retinoic acid ஆகவும் மாற்றப்படுகின்றது. இந்த இராசாயனப் பொருட்கள் புற்றுநோய் கலன்கள் வளர்வதற்கு அல்லது தப்பிப் பிழைப்பதற்கு உதவுகின்றன.

புற்று நோயை உண்டாக்கும் எண்ணெய்ஏனைய எண்ணெய்களை விட சூரியகாந்தி எண்ணெய் அதிக வெப்பத்திற்கு வெப்பமாக்க கூடியது. இவ்வாறாக அதிக வெப்பத்தில் வெப்பமாக்கப்படும் போதே இந்த நச்சுப் பொருட்கள் அதிகம் உருவாகின்றன. இந்த அல்டிகைட் உருவாகும் போது உணவின் மணமும், சுவையும் மாறுகின்றது. எனவே அதனை கண்டறிந்து தவிர்க்க முடியும்.

தவார எண்ணெய்களில் (Vegetable oils) பொரிக்கப்படும் உணவு வகைகளில் உலக சுகாதார நிறுவனத்தினால் பரிந்துரை செய்யப்பட்ட அளவை விட 200 மடங்கு அதிகமான அல்டிகைட் என்ற நச்சுப்பொருட்கள் உள்ளதாக DeMonfort University ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.

புற்று நோயை உண்டாக்கும் எண்ணெய்வெண்ணெய், lard  மற்றும் ஒலீவ் எண்ணெய்களில் தயாரிக்கப்படும் உணவுகளில் நச்சுப்பொருட்கள் குறைவாகவே உள்ளது. அதிலும் தேங்காய் எண்ணையில் பொரிக்கப்படும் உணவுகளில் இந்த பொருட்கள் மிகவும் குறைவாக உள்ளதால் அதுவே சிறந்த எண்ணெய் எனக் கருதப்படுகின்றது. எனினும் அதிக கொழுப்புள்ள உணவுகளை உண்பது இருதய நோய்களை ஏற்படுத்தும் என்பதால் அடிக்கடி உட்கொள்வதை தவிர்க்கலாம்.

இருந்தபோதும், இந்த எண்ணெய்களை குறைந்த அளவு உணவில் சேர்ப்பது விற்றமின்களை எமது உடல் உள்ளெடுப்பதற்கு உதவும். ஆனால் பயன்படுத்திய எண்ணெய்களை மீண்டும் பயன்படுத்துவது குடல் புற்றுநோயை ஏற்படுத்தும். ஏனெனில் பயன்படுத்திய எண்ணெய்களில் காணப்படும் சிதைவடைந்த இராசாயனப்பொருட்கள் எமது உடலில் மரபணு மாற்றத்தை ஏற்படுத்தி புற்றுநோயை உண்டாக்குவதுடன், புற்றுநோய் ஏனைய உறுப்புக்களுக்கு பரவுவதற்கும் காரணமாகின்றது.

ஒலீவ் எண்ணெய் மற்றும் Rapeseed oil என்பன அதிக வெப்பத்தை தாங்கும் கொழுப்பு பொருட்களை கொண்டிருப்பதால் அவை அதிக ஆபத்தானவை அல்ல.

புற்று நோயை உண்டாக்கும் எண்ணெய்இதனிடையே அதிக அளவில் உள்ளெடுக்கப் படும் சில விற்றமின்கள் மற்றும் தாதுப்  பொருட்களும் புற்றுநோயை ஏற்படுத்துவதாக கருதப்படுகின்றது. விற்றமின்கள் மற்றும் தாதுப் பொருட்கள் உடலுக்கு நல்லது என்றாலும் சரியான அளவில் எடுக்காது விட்டால் புற்றுநோய் ஆபத்தை உண்டாக்க கூடியவை.

University of Colorado Cancer Centre என்னும் நிறுவனத்தை சேர்ந்த பணிப்பாளர் Tim Byer என்பவர் இந்த ஆய்வை மேற்கொண்டிருந்தார். 300,000 இற்கு மேற்பட்ட தரவுகளை வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பின்வரும் நான்கு பொருட்களே இந்த பக்கவிளைவுகளை உருவாக்குகின்றன. ஏனைய விற்றமின்களும், தாதுப்பொருட்களும் இவ்வாறான பக்க விளைவுகளை ஏற்படுத்துவதில்லை.

செலனியம் (Selenium supplements)

இதனை அதிகளவில் எடுத்தால் கடுமையான பக்கவிளைவுகள் ஏற்படும். இது புதிதாக புற்றுநோயை உருவாக்குமா என்பது தொடர்பில் சான்றுகள் இல்லாதபோதும், புற்றுநோய் உள்ளவர்களில் அதனை அதிகரிக்க செய்யும். தோல் புற்றுநோய்க்கான காரணியும் இது என கண்டறியப்பட்டுள்ளது.

விற்றமின் ஈ (Vitamin E)

புறொஸ்ரேற் புற்று நோய்க்கான (Prostate cancer) காரணியாக இது இருப்பதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. அதிகளவான விற்றமின் ஈ எதிர்மறையான விளைவுகளை எற்படுத்தும். எனினும் இது புற்றுநோயை ஏற்படுத்துமா என்பதை இதுவரை உறுதி செய்யவில்லை.

புற்று நோயை உண்டாக்கும் எண்ணெய்போலிக் அமிலம் மற்றும் விற்றமின் பி (Folic acid, B vitamin)

அதிகளவான போலிக் அமிலம் குடல் புற்றுநோயை ஏற்படுத்துவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. போலிக் அமிலமும், விற்றமின் பியும் அதிகளவில் எடுக்கும்போது புற்றுநோய்க்கான சாத்தியங்களை அதிகரிப்பதாக அமெரிக்காவில் இருந்து வெளிவரும் மருத்துவ இதழ் தெரிவித்துள்ளது. இது புற்றுநோயை 21 விகிதம் அதிகரிப்பதுடன், 38 விகிதமான இறப்புக்களையும் ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பீற்றா கரோட்டின் (Beta carotene)

இது சுவாசப்பை புற்றுநோய்க்கான காரணியான கண்டறியப்பட்டுள்ளது. புகைப் பிடிப்பவர்கள் மற்றும் Asbestos உள்ள இடங்களில் பணியாற்றுபவர்களில் இது அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. 29,000 பேரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் 18 விகிதம் சுவாசப்பை புற்றுநோய் அதிகரிப்பு காணப்பட்டது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

தினம்தோறும் 20 மில்லிகிராம் பீற்றா கரோட்டின் 5 தொடக்கம் 8 வருடங்களுக்கு உட்கொண்டவர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் உணவுகளில் உள்ள விற்றமின்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தாது, ஆனால் மருந்துகளாக உள்ளேடுப்பவர்களே அதிக கவனம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.

Tamil News