சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக மாணவர்களுக்கான அறிவித்தல்

கிழக்குப் பல்லைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் இருந்து மாணவர்கள் அனைவரும் இன்று (03) வெறியேற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் வன்முறை நடவடிக்கைகளை கண்டித்தும் நிறுவகத்தில் சுமுகமான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்காகவும் விரிவுரையாளர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் தெரிவித்துள்ளார்.

சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்திற்குள் மறு அறிவித்தல் வரை மாணவர்கள் பிரவேசிக்க முடியாது எனவும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிறுவகத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு பல்கலைக்கழக கல்வி சார் உறுப்பினர்கள் உள்ளடங்காத சுதந்திர விசாரணை குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.

இந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தவறிழைத்தவர்களுக்கு பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் அறிவித்துள்ளார்.

Tamil News

Leave a Reply