236 Views
வவுனியாவை சேர்ந்த 4பேர் கைது
யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு செல்ல முயன்றதாக வவுனியாவை சேர்ந்த 4 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (03) அதிகாலை ஒரு மணியளவில் யாழ். வேலணை கடற்கரையில் சந்தேகத்திற்கிடமாக சிலர் உள்ளதை அவதானித்த கடற் படையினர் மேற்கொண்ட விசாரணையில் தமிழ்நாட்டிற்கு செல்வதற்காக காத்திருந்தமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டு ஊர்காவற்றுறை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
வவனியா மாவட்டத்தில் இருந்து யாழ்ப்பாணம் வேலணை பகுதிக்கு வந்து அங்கிருந்து தமிழ்நாட்டிற்கு செல்ல முயன்றமை விசாரணையில் தெரியவந்துள்ளது.