Woman of the Year: பிரியா நடேசனுக்கு அவுஸ்திரேலிய சஞ்சிகை கௌரவம்

173 Views

பிரியா நடேசனுக்கு அவுஸ்திரேலிய சஞ்சிகை கௌரவம்

அவுஸ்திரேலியாவில் புகலிடக்கோரிக்கை விடுத்துள்ள பிரியா நடேசனுக்கு அவுஸ்திரேலிய சஞ்சிகை கௌரவம் வழங்கியுள்ளது. அவுஸ்திரேலியாவின் முக்கிய மாதர் சஞ்சிகையான Marie Claire, என்ற சஞ்சிகையே ‘Woman of the Year’ என்ற கௌரவத்தை  வழங்கியுள்ளது. 

அவுஸ்திரேலியாவில் புகலிடக்கோரிக்கை மறுக்கப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவிருந்த நிலையில், இவர்களுக்கு அவுஸ்திரேலியாவின் பல தரப்புகளிலிருந்தும் ஆதரவுக்கரம் நீட்டப்பட்டதைத் தொடர்ந்து அந் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.

இப்போதும் குறித்த குடும்பம் தமது தஞ்சக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என போராடிக்கொண்டிருக்கிறது. இது அவுஸ்திரேலிய அரசியலில் கடந்த சில ஆண்டுகளாகவே  கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகின்றது.

இந்தப்பின்னணியில், தனது குடும்பத்தின் இருப்புக்காக போராடிய பிரியாவுக்கு அவுஸ்திரேலியாவின் முக்கிய மாதர் சஞ்சிகையான Marie Claire,  ‘Women Of The Year’ என்ற கௌரவத்தை  வழங்கியுள்ளது.

72f8b956 87d6 4a07 9cd3 63b7871760b3 Woman of the Year: பிரியா நடேசனுக்கு அவுஸ்திரேலிய சஞ்சிகை கௌரவம்

பிரான்ஸில் 1937 இல் ஆரம்பிக்கப்பட்டு பல்வேறு நாடுகளிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் Marie Claire என்ற இந்த சஞ்சிகையின் அவுஸ்திரேலிய பதிப்பு, பிரியா உட்பட 9 பெண்களுக்கும்,  பிரியா குடும்பத்தின் விடுதலைக்காக போராடிய The Women of Biloela என்ற குழுவுக்கும், இந்த கௌரவத்தை தமது டிசம்பர் மாத சஞ்சிகை ஊடாக வழங்கியுள்ளது.

பிரியாவுடன் Grace Tame, Brittany Higgins, Ash Barty, Ellie Cole, Emma McKeon, Shareena Clanton, Charlee Fraser, Christine Holgate, Chanel Contos ஆகிய பெண்களுக்கு சாதனைப்பெண்கள் என்ற கௌரவத்தை இந்த சஞ்சிகை வழங்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

நன்றி- SBS தமிழ்

Leave a Reply