காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை கரையை கடக்கிறது: சென்னை வானிலை ஆய்வு மையம்

274 Views

காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை கரையை கடக்கிறது

வட தமிழ்நாட்டை ஒட்டியுள்ள கடற்பகுதியில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு அதி கன மழை பெய்யும் என   எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை கரையை கடக்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வலுப்பெறாது என கணிக்கப்பட்டது. ஆனால், இப்போது, இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இப்போது சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 300 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டிருக்கிறது. இது நாளை காலை சென்னைக்கு அருகில் கரையைக் கடக்குமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply