அதிகாரிகளை தொடர்ச்சியாக அச்சுறுத்தும் பௌத்த மத குரு- இரா.துரைரெட்னம் எச்சரிக்கை

151 Views

அதிகாரிகளை தொடர்ச்சியாக அச்சுறுத்தும்

அதிகாரிகளை தொடர்ச்சியாக அச்சுறுத்தும் அம்பிட்டிய சுமணரத்ன தேரரின் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் பௌத்த சாசன அமைச்சு முறையான நடவடிக்கையினை எடுத்து சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்காவிட்டால் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தொடர்பில் மட்டக்களப்பு மக்களும் அதிகாரிகளும் இறுதி முடிவெடுக்க வேண்டிய நிலையேற்படும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் பத்மநாபா மன்றத்தின் தலைவருமான இரா.துரைரெட்ணம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இன்று மட்டக்களப்பில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த அவர்,

மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் பௌத்த மதகுரு அம்பிட்டிய சுமனரத்ன தேரர், கடந்த 15ஆம் திகதி அரசாங்க உத்தியோகத்தர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைத்தனமான செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றேன்.

குறித்த பௌத்தகுரு ஒரு வருடகாலத்திற்குள் இலுப்படிச்சேனை,பிள்ளையாரடி பகுதியில் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு எதிராகவும் கடந்த காலத்தில் மாவட்ட செயலகம், பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளருக்கு எதிராகவும் கெவிழியாமடு பகுதியில் கிராம சேவையாளருக்கு எதிராகவும் கடந்த 15ஆம் திகதி பட்டிப்பளை பிரதேச செயலாளருக்கு எதிராகவும் தொடர்ச்சியான முறையற்ற வகையில் வன்முறைத்தனமாக செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளார்.

குறித்த மதருவின் செயற்பாடானது பௌத்தமதகுருவின் கொள்கைக்கு எதிரான வகையில் இடம்பெற்றுவரும் நிலையில், இலங்கை அரசாங்கம் ஒரு பார்வையாளர் போன்று இவரின் செயற்பாட்டை பார்த்துவருகின்றது. இந்த மதகுருவினை மட்டக்களப்பு மாவட்ட மக்கள் வெறுக்கின்றார்கள். மதருவுக்குரிய மனிதாபிமானமோ, கொள்கையோ இவரிடமில்லை. இவர் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் பௌத்த சாசன அமைச்சு முறையான நடவடிக்கையினை எடுத்து சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்காவிட்டால் தேரர் தொடர்பில் மட்டக்களப்பு மக்களும் அதிகாரிகளும் இறுதி முடிவெடுக்கவேண்டிய நிலையேற்படும் என எச்சரித்துள்ளார்.

ilakku Weekly Epaper 156 November 14 2021 Ad அதிகாரிகளை தொடர்ச்சியாக அச்சுறுத்தும் பௌத்த மத குரு- இரா.துரைரெட்னம் எச்சரிக்கை

Leave a Reply