ஆப்கானிஸ்தானில் கடந்த 9ம் திகதி 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த தற்கொலைத் தாக்குதலுக்கு ஐ.நா கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் குண்டுஸ் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை ஷியா மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து, பலர் காயமடைந்துள்ளனர்.
கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் சியா இன முஸ்லீம் சிறுபான்மை மக்களாவார்கள். சன்னி இன முஸ்லீம் மக்களை பிரதிநிதுத்துவப்படுத்தும் பிராந்திய பெயர் கொண்ட ஐ.எஸ் அமைப்பே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
அமெரிக்காவின் பிரதி வெளிவிவகாரச் செயலாளர் வென்டி செர்மான் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இந்த தாக்குதல் இடம் பெற்றிருந்தது.
இந்நிலையில், மத நிறுவனங்களைத் தாக்கும், இந்த வாரத்தில் நடந்த, 3ஆவது தாக்குதல் என்று ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.
சென்ற ஞாயிற்றுக் கிழமை காபூலில் உள்ள மசூதி ஒன்றிலும் கடந்த புதன்கிழமை பாடசாலை ஒன்றிலும் நடந்த தற்கொலை தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர். மேற்கத்திய படைகள் வெளியேறியதை அடுத்து தாலிபன்கள் ஆட்சிக்கு வந்தபின் நடந்த மிகப்பெரிய தாக்குதல்கள் இவை.