இந்திய – இலங்கை மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் : கனிமொழி

இந்திய – இலங்கை மீனவர்களிடையேயான பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசாங்கம் ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்று இந்திய பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி காரைக்காலிலும் இராமேஸ்வரத்திலும் ஆர்ப்பாட்ட பேரணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்தநிலையில், ராமேஸ்வரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.

‘இந்திய – இலங்கை மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என தமிழக அரசு, தொடர்ந்தும் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்து வருகிறது’.

‘எனினும், இதுவரை மீனவர் பிரச்சினை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை’.
‘எவ்வாறாயினும்,தமிழக முதல்வர், விரைவில் மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பார்’ என்று இந்திய பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.