உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் இன்று (17) 187 வாக்குகளால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
குறித்த சட்டமூலம் தொடர்பான விவாதம் இன்று பிற்பகல் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதன் சட்டமூலத்துக்கு ஆதரவாக 187 வாக்குகள் பதிவுசெய்யப்பட்டன
எனினும் எதிராக எந்த வாக்குகளும் பதிவாகவில்லை.
இதன்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தின் சில சரத்துக்கள்
அரசியலமைப்புக்கு முரணானது என்று உயர்நீதிமன்றம் வியாக்கியானம் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது