ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: 250 பேர் பலி

277 Views

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தான் பக்திகா மாகாணத்தில் நிகழ்ந்த வலுவான நிலநடுக்கத்தில் குறைந்தது 250 பேர் உயிரிழந்துள்ளனர்.

250 பேர் இந்த சம்பவத்தில்  உயிரிழந்ததாகவும் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்றும்   சுமார் 150 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கோஸ்ட் நகரில் இருந்து 44 கி.மீ. தூரத்தில் இந்த நிலநடுக்கம் நடந்துள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லைகளுக்குள் சுமார் 500 தூரத்துக்கு இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது என ஐரோப்பிய மத்தியத்தரைக்கடல் நிலநடுக்கவியல் மையம் கூறியதாக ராய்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.

Tamil News

Leave a Reply