பதவியைத் துறந்தார் லொஹான் ரத்வத்தே; ஜனாதிபதியின் உத்தரவையடுத்து அதிரடித் திருப்பம்

146 Views

ஜனாதிபதியின் உத்தரவையடுத்து அதிரடித் திருப்பம்
அநுராதபுர சிறைச்சாலையில் தமிழ் கைதிகளை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தினாரென குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தமது இராஜாங்க அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்தார். ஜனாதிபதியின் உத்தரவையடுத்து அதிரடித் திருப்பம்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டம் தற்போது நடந்துவரும் சூழ்நிலையில், அமைச்சரின் இந்த செயற்பாடு இலங்கை அரசுக்கு மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதால் அவரை உடனடியாக பதவிவிலக அரச மேல்மட்டம் கோரி இருந்தது.

இதன்படி தனது இராஜினாமா கடிதத்தை லொஹான் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார். லொஹானின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021

Leave a Reply