1000 ரூபா சம்பளத்தைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை – அமைச்சர் ஜீவன்

417 Views

Rs 1000 Salary Hike State Minister Jeevan Thondaman 1000 ரூபா சம்பளத்தைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை – அமைச்சர் ஜீவன்

முதலாளிமார் இன்னும் ஒரு மாத காலத்துக்குள் தோட்ட தொழிலாளர்கள் அனைவருக்கும் 1000 ரூபா சம்பளத்தைப் பெற்றுக் கொடுப் பதற்கு தவறினால், அதற்கான தனியான சட்டமொன்றை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றது என தோட்ட மற்றும் சமூதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் இது குறித்து தெரிவிக்கையில், “தோட்ட முதலாளிமார்கள் சட்டத்தில் உள்ள குறைபாடுகளைப் பயன்படுத்தி பதிவு செய்யப்படாத தோட்டத் தொழிலாளர்களுக்கு 750 ரூபா சம்பளத்தை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், அவர்களுக்கு நியாயமான சம்பளத்தைப் பெற்றுக் கொடுக்கவும் தொழில் அமைச்சின் ஊடாக சட்ட மூலமொன்றை கொண்டு வரவுள்ளோம்” என்றார்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 139

ilakku-weekly-epaper-139-july-18-2021

Leave a Reply