அமெரிக்கா, ஜெர்மனியை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு

அமெரிக்கா மற்​றும் ஜெர்​மனியை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு மருத்​து​வத்​துக்​கான நோபல் பரிசு பகிர்ந்து அளிக்​கப்​பட்டு உள்​ளது.

அமெரிக்​காவை சேர்ந்த கார்ல் டீசெரோத் (54) மற்​றும் ஜெர்​மனியை சேர்ந்த பீட்​டர் ஹெகேமன் (71), ஜார்ஜ் நாகல் (73) ஆகியோ​ருக்கு மருத்​து​வத்​துக்​கான நோபல் பரிசு பகிர்ந்து அளிக்​கப்​பட்டு உள்​ளது.

மனித மூளை​யில் கோடிக்​கணக்​கான நியூ​ரான்​கள் உள்​ளன. இவற்​றின் செயல்​பாடு​களை ஆய்வு செய்​வது விஞ்​ஞானிகளுக்கு பெரும் சவாலாக இருந்​தது. கடந்த 2005-ம் ஆண்​டில் ஆப்​டோஜெனடிக்ஸ் என்ற தொழில்​நுட்​பத்தை விஞ்​ஞானிகள் கார்ல் டீசெரோத், பீட்​டர் ஹெகேமன், ஜார்ஜ் நாகல் ஆகியோர் கண்​டு​பிடித்​தனர்.

ஆப்​டோஜெனடிக்ஸ் தொழில்​நுட்​பம் மூலம் பார்​வையற்​றோருக்கு பார்வை கிடைக்க தீவிர ஆராய்ச்சி நடை​பெற்று வரு​கிறது. பார்க்​கின்​சன், கை-​கால் வலிப்​பு, அல்​சைமர், மனச்​சோர்வு உள்​ளிட்ட நரம்​பியல் சார்ந்த நோய்​களை இந்த தொழில்​நுட்​பம் மூல​மும் குணப்​படுத்​த​வும் ஆராய்ச்சி நடை​பெற்று வரு​கிறது.

கடந்த 2005-ம் ஆண்​டில் அமெரிக்க விஞ்​ஞானி கார்ல் டீசெரோத் முதல்​முறை​யாக ஆப்​டோஜெனடிக்ஸ் தொழில்​நுட்​பம் குறித்து விளக்​கம் அளித்​தார். ஒற்றை செல் பாசி​யில் காணப்​படும் ஒளியை உணரும் திறன் கொண்ட சேனல்​ரோ​டாப்​சின் என்ற புரதத்தை அவர் பிரித்​தெடுத்​தார். மரபணு பொறி​யியல்

மூலம் அந்த புரதத்தை எலி​யின் மூளை​யில் செலுத்​தி​ மூளை நரம்புகளை கட்டுப்படுத்த முடியும் என்பதை நிரூபித்தார். இதே​முறை​யில் மனிதர்​களின் நரம்பு செல்​களை கட்​டுப்​படுத்த முடி​யும் என்​ப​தை​யும் அவர் நிரூபித்​தார்.

ஜெர்​மனியை சேர்ந்த பீட்​டர் ஹெகேமன், ஜார்ஜ் நாகல் ஆகியோரும் ஆப்​டோஜெனடிக்ஸ் முன்​னோடிகளாக விளங்குகின்றனர். மூன்று விஞ்​ஞானிகளும் வெவ்​வேறு பல்​கலைக்​கழகங்​களில் பணி​யாற்​றும் சூழலில் ஆப்​டோஜெனடிக்ஸதொழில்​நுட்ப வளர்ச்​சிக்கு முக்​கிய பங்​களிப்பை வழங்​கி​யிருப்பதால் மூவருக்​கும் நோபல் பரிசு பகிர்ந்து அளிக்​கப்​பட்​டிருக்​கிறது.

அக்​. 6-ம் தேதி இயற்​பியல், 7-ம் தேதி வேதி​யியல், 8-ம் தேதி இலக்கியம், 9-ம் தேதி அமை​தி, 12-ம் தேதி பொருளா​தா​த்துக்கான நோபல் பரிசுகள் அறிவிக்​கப்பட உள்​ளன. வரும் டிசம்​பர் மாதம் சுவீடன் தலைநகர் ஸ்டாக்​ஹோமில் நோபல் பரிசுகள் வழங்கப்படும். அமை​திக்​கான நோபல் பரிசு மட்​டும் நார்வே தலைநகர் ஓஸ்​லோ​வில் வழங்​கப்​படும். 24 காரட் தங்​கத்​துடன்​கூடிய பதக்​கம், பட்​ட​யம் மற்​றும் ரூ. 11.44 கோடி பரிசுத்​ தொகை ஆகிய​வை​யும்​ அளிக்​கப்​படும்​.