பன்னிரு வேங்கைகளின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல்! தீருவில் சதுக்கத்தில் உணர்வுபூர்வ அஞ்சலி!

WhatsApp Image 2026 10 05 at 8.53.20 PM 2 பன்னிரு வேங்கைகளின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல்! தீருவில் சதுக்கத்தில் உணர்வுபூர்வ அஞ்சலி!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழா அச்சுறுத்தல்தளையும் கடந்து இந்திய – இலங்கை கூட்டுச்சதியில் வீரகாவியமான விடுதலை புலிகளின் மூத்த தளபதிகளான குமரப்பா, புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவேந்தல் நேற்றைய தினம் (05) திங்கட்கிழமை தீருவில் சதுக்கத்தில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.

WhatsApp Image 2026 10 05 at 8.53.20 PM 3 பன்னிரு வேங்கைகளின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல்! தீருவில் சதுக்கத்தில் உணர்வுபூர்வ அஞ்சலி!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தளபதிகளாக இருந்த லெப்.கேணல் குமரப்பா மற்றும் லெப்.கேணல் புலேந்திரன் உள்ளிட்ட பன்னிரு வேங்கைள் பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து 03.10.1987 அன்று அதிகாலை 3.30 மணியளவில் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டு காங்கேசன்துறை மற்றும் பலாலி முகாம்களில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்திய – சிறிலங்கா படைகளின் கண்காணிப்பில் பலாலி படைமுகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கொழும்பிற்கு கொண்டுசெல்ல இரு நாட்டு இராணுவத்தினரும் சதி செய்த போது இதே நாளில் 05.10.1987 அன்று ‘யாழ். மாவட்டத் தளபதி’ லெப். கேணல் குமரப்பா, ‘திருமலை மாவட்டத் தளபதி’ லெப். கேணல் புலேந்திரன், மேஜர் அப்துல்லா, கப்டன் நளன், கப்டன் மிரேஸ், கப்டன் பழனி, கப்டன் கரன், கப்டன் ரகு, லெப்டின்னட் அன்பழகன், லெப்டின்னட் தவக்குமார், 2ம் லெப்டின்னட் ஆனந்தகுமார், 2ம் லெப்டின்னட் ரெஜினோல்ட் ஆகிய பன்னிரு வேங்கைகளும் சயனட் குப்பி கடித்து வீரகாவியமாகியிருந்தனர்.

WhatsApp Image 2026 10 05 at 8.53.20 PM 4 பன்னிரு வேங்கைகளின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல்! தீருவில் சதுக்கத்தில் உணர்வுபூர்வ அஞ்சலி!

அவர்களின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழ்த் தேசிய பேரவையின் ஏற்பாட்டில் அவர்களுடைய வித்துடல் தகனம் செய்யப்பட்ட  வல்வெட்டித்துறை தீருவில் சதுக்கத்தில் நேற்று 05.10.2026 திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு இடம்பெற்றிருந்தது.

பன்னிரு வேங்கைகளில் ஒருவரான வல்வெட்டித்துறையை சேர்ந்த கப்டன் பழனியின் சகோதரியும் மாவீரர் இளவரசியின் தாயாருமான தி.பத்மாதேவி அவர்கள் பொதுச் சுடரினை ஏற்றிவைத்ததை தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது. தொடர்ந்து பன்னிரு வேங்கைகளின் நினைவாக பன்னிரண்டு தீபங்கள் ஏற்றப்பட்டு சுடர் வணக்கம் இடம்பெற்று பன்னிரு வேங்கைகளில் ஒருவரான லெப்டினன்ட் அன்பழகனின் சகோரர் நடனசிகாமணி அவர்கள் மலர் மாலை அணிவித்ததை தொடர்ந்து மலர் வணக்கம் இடம்பெற்றது.

WhatsApp Image 2026 10 05 at 8.53.20 PM 5 பன்னிரு வேங்கைகளின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல்! தீருவில் சதுக்கத்தில் உணர்வுபூர்வ அஞ்சலி!

சுட்டெரிக்கும் வெய்யிலுக்கு மத்தியிலும் பன்னிரு வேங்கைகளுக்கு அவர்களது உடல்கள் தகனம் செய்யப்பட்ட தீருவில் சதுக்கத்தில் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் பன்னிரு வேங்கைகளின் உறவினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளருமான செல்வராஜா கஜேந்திரன், வல்வெட்டித்துறை நகரசைபை உறுப்பினர்கள், தமிழ்த் தேசிய பேரவையினர், பொதுமக்கள், தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.

WhatsApp Image 2026 10 05 at 8.53.20 PM பன்னிரு வேங்கைகளின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல்! தீருவில் சதுக்கத்தில் உணர்வுபூர்வ அஞ்சலி!
இதேவேளை, இந்நிகழ்வு தொடர்பில் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள், வல்வெட்டித்துறை பொலிசாரால் பொலிஸ் நிலையத்திற்கு நேரில் அழைத்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டதுடன், விடுதலை புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. அந்த அமைப்பை சேர்ந்தவர்களை நினைவுகூர்ந்தால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவீர்கள். அவர்களது உருவப்படங்களை தாங்கிய பதாகை, தடை செய்யப்பட்ட அமைப்பின் அடையாளங்கள், ஒலிபெருக்கி சாதனங்கள் மற்றும் பந்தல்கள் அமைத்தல் என்பவற்றை பயன்படுத்த முடியாது என கூறியதுடன் அதை மீறுகின்ற பட்சத்தில் நிகழ்விடத்திலேயே வைத்து உடனடியாக கைது செய்யப்படுவிர்கள் என்று எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.