ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி வரிச்சலுகை இலங்கைக்கு 2028 ஆம் ஆண்டுவரை கிடைக்கப்பெறும். நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டத்தைக் காட்டிலும் பலவீனமான அம்சங்களை உள்ளடக்கிய வகையில் தான் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தால் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
பயங்கரவாத தடுப்புச் சட்டம் குறித்து மாறுப்பட்ட கருத்துக்கள் குறிப்பிடப்படுகின்றன. நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை காட்டிலும் சாதகமான அம்சங்களை உள்ளடக்கிய வகையில் தான் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் ஆக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் காணப்படும் மோசமான ஏற்பாடுகள் புதிய சட்டமூலத்தில் உள்வாங்கப்படவில்லை.பொலிஸ் அதிகாரி முன்னிலையில் வழங்கப்படும் வாக்குமூலம் நீதிமன்றில் சாட்;சியமாக ஏற்றுக்கொள்ளப்படும் என்ற ஏற்பாடு புதிய சட்டமூலத்தில் முழுமையாக இரத்துச் செய்யப்பட்டுள்ளது.அதேபோல் தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பித்தல் மற்றும் தடுத்து வைத்தல் காலவகாசம் தொடர்பிலும் முற்போக்கான மாற்றங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன என அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.



