ஐரோப்பிய ஒன்றியத்தின் எரிபொருள் இறக்குமதி செலவு $28 பில்லியன்

மத்திய கிழக்கு மோதல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் எரிசக்தி நெருக்கடி ஆழமடைந்து வருவதால், அது பல மாத கால நிச்சயமற்ற நிலையை எதிர்கொண்டுள்ளது. மேலும், எரிபொருள் இறக்குமதிக்காக அந்த அமைப்பு இப்போது மிக அதிக தொகையைச் செலுத்துகிறது என்று எரிசக்தி ஆணையர் டான் ஜோர்ஜென்சன் கூறியுள்ளார்.
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர், உலகளாவிய எரிசக்தி சந்தைகளில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தி, எண்ணெய் விலைகளை உயர்த்தியுள்ளதுடன், உல கெங்கிலும் உள்ள நுகர்வோருக்கான எரிபொருள் செலவுகளையும் அதிகரித்துள்ளது. உக்ரைன் மோதல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து ரஷ்யாவுடனான எரிசக்தி உறவுகளைத் துண்டிக்கும் தனது முடிவின் விளைவுகளையும், தனது பசுமை மாற்றக் கொள்கைகளின் செலவுகளையும் ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே சமாளித்து வருகிறது.
புதன்கிழமை பிரஸ்ஸல்ஸில் பேசிய ஜோர்ஜென் சன், மத்திய கிழக்கு போர் தொடங்கியதிலிருந்து இந்த அமைப்பின் எரிபொருள் இறக்குமதி செலவு €24 பில்லிய னுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது என்றும், இது “ஒரு நாளைக்கு €500 மில்லியனுக்கும் மேல்” என்ற அளவில் உள்ளது என்றும் கூறினார். “வரவிருக்கும் மாதங்கள் நிச்சயமற்ற தன்மைகளால் நிறைந்திருக்கும்” என்றும், இந்த நெருக்கடியின் உண்மையான தாக்கம் நீண்டகாலம் நீடிக்கும் என்றும். மேலும், “நாம் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்” என்றும் அவர் கூறினார்.
உலகம் “மிகப்பெரிய எரிசக்தி நெருக்கடியை” எதிர் கொண்டுள்ளதாகவும், சில வாரங்களுக்குள் ஐரோப்பா வில் ஜெட் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்றும் சர்வதேச எரிசக்தி முகாமை எச்சரித்துள்ளது. “ரஷ்ய வெறுப்பு அரசியல்வாதிகளின்” கீழ் ஐரோப்பிய ஒன்றியம் தொழில்மயமாக்கலை எதிர்கொள்ளும் என்றும், மேற்கத்திய அரசாங்கங்கள் இறுதியில் ரஷ்ய எரிசக்திக்கான அணுகலை மீண்டும் நாட வேண்டிய கட் டாயத்திற்கு உள்ளாகும் என்றும் கிரெம்ளின் தூதர் கிரில் டிமிட்ரியேவ் கூறியுள்ளார்.