திருமலையில் கொரோனாவுக்கு 24 மணி நேரத்தில் 7 பேர் பலி

139 Views

கொரோனாவுக்கு 24 மணி நேரத்தில் 7 பேர் பலிகொரோனாவுக்கு 24 மணி நேரத்தில் 7 பேர் பலி: திருகோணமலையில் நேற்று மாலை வரையான 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவுக்கு 7 பேர் பலியாகினர். 235 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தினால் வெளியிடப்பட்ட புதுப்பிக்கப்பட்ட நாளாந்த உத்தியோகபூர்வ அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், திருகோணமலை மாவட்டத்தில் நேற்று மாலை வரையான 24 மணித்தியாலத்திற்குள் ஏழு மரணங்கள் சம்பவித்துள்ளன. அத்துடன், 131 ஆண்கள், 104 பெண்க ளுமாக 235 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 31 ஆம் திகதி வரைக்கும் 4,631 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டனர். இதில் 99 பேர் மரணித்தனர். ஒரு வயது தொடக்கம் ஐந்து வயது வரை 147 சிறுவர்களும், 65 வயதுக்கு மேற்பட்ட 375 பேரும் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கர்ப்பவதி தாய்மார் 148 பேர் இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். நேற்று உயிரிழந்த எழுவருடன், திருகோணமலை மாவட்டத்தில் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 248ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், திருகோண மலை மாவட்டத்தில் 9,815 பேர் தொற்றுக்கு உள்ளாகினர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ilakku-Weekly-Epaper-145-August-22-2021

Leave a Reply