முல்லைத்தீவு மாவட்டம்-தாயகத்தின் நீர்வளத்தைப் பாதுகாப்போம்: 1979ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டமானது, வன்னி இராச்சியத்தின் பெரும் பகுதியினை உள்ளடக்கியதாகவும், வடமாகாணத்தில் அதிக நிலப்பரப்பைக் கொண்ட பிரதேசமாகவும் உள்ளது. 2009 ஆம் ஆண்டு வரையும் 5 உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளாகவும், 2009 இற்குப் பின் வெலிஓயா என்ற பெயரில் மணலாறு பகுதியை உள்ளடக்கிய 6 உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளைக் கொண்ட புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.
பகுதி I
முல்லைத்தீவின் இயற்கை வளங்கள்
முல்லைத்தீவின் இயற்கை வளங்கள்: குருத்து மலை, வாட்டி மலை, தென்னங் கள்ளு மலை, வெள்ளிமலை ஆகிய மலைகளைக் கொண்டதால் குறிஞ்சி பகுதியாகவும், பெரும்பகுதி காடுகள் நிறைந்து காணப்படுவதால் முல்லை எனவும், கிழக்குப் பகுதி முழுவதும் 70 கிலோ மீட்டர் கடல் பரப்பை கொண்டதால், நெய்தல் என்ற பெயராலும் அழைக்கப்படுகின்றது. நிலப்பகுதி செங்கபில மண்ணாகவும், கடலில் கடற்கரை மண் இல்மனைட் கலந்த மண் ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. புல்மோட்டை முதல் முல்லைத்தீவு வரை 70 கிலோ மீட்டரில் இல்மனைட் மணல் கலந்த மண் காணப்படுகின்றது.
கொக்கிளாய், நாயாறு, நந்திக்கடல், மாத்தளன் வரை நீண்ட கடலேரிகளைக் கொண்டுள்ளது. இப்பகுதிகளில் இறால், நண்டு, மீன் போன்றவை பிடிக்கப்பட்டு வருகின்றன. முல்லைத்தீவு மாவட்டமானது, மூன்று பாரிய குளங்களையும், 17 நடுத்தரக் குளங்களையும், 211 சிறிய குளங்களையும் கொண்டுள்ளது. 3893 ஹெக்டயர் பெரும்போகத்தையும் 455.5 ஹெக்டயர் சிறுபோக வயல்களையும் கொண்டுள்ளது.
தனிச் சிங்கள குடியேற்றம்
தனிச் சிங்கள குடியேற்றம்: நேற்று வடக்கு கிழக்கு மாகாண நிரந்தர இணைப்பை முழுமையாகத் துண்டித்து, இப்பிரதேசம் உருவாக்கப்பட்டு தனிச் சிங்கள குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 36 ஆயிரத்து 623 மக்கள் மட்டும் வாழ்ந்து வருகின்றனர். மொத்தக் குடும்பங்கள் 44,126 மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.
2018 ஆம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள குளங்களைப் புனரமைப்புச் செய்வதற்காக 58 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வன்னித் தேர்தல் தொகுதியில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் மட்டும் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ளதைக் குறிப்பிட வேண்டியுள்ளது.
முல்லைத்தீவின் நீர் வளங்கள்
6 நடுத்தர சிறிய குளங்கள், 26 சிறிய குளங்கள் உள்ளடக்கிய பகுதிகளில் நெல், சிறுதானிய உற்பத்தியை செய்ய முடியாத சூழ்நிலை காணப்படுகின்றது. இப்பகுதிகள் யாவும் வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவுக்குள் உள்ளதால் எம் மக்கள் பாதுகாப்பாக உற்பத்தி செய்ய முடியாத சூழ்நிலை உள்ளது.
நிதியுதவி தேவை
வடமாகாணத்தில் மிகப் பெரிய நிலப்பரப்பைக் கொண்ட முல்லைத்தீவு மாவட்டம்
வடமாகாணத்தில் மிகப் பெரிய நிலப்பரப்பைக் கொண்ட முல்லைத்தீவு மாவட்டமானது, அதிக விளைச்சலைத் தரக்கூடிய மாவட்டம். அதனை முழுமையாக பயன்படுத்துவதுடன் விவசாயம், மட்டும் செய்யாது, விலங்கு வேளாண்மை, கடல் வளம் சார்ந்த உற்பத்திகளையும் நாம் அதிக அளவில் மேற்கொள்ள வேண்டும். எனவே பொதுமக்கள் உறவுகள் கொடையாளிகள் தங்களுடைய முழுமையான முயற்சிகளை மேற்கொண்டு எமது தாயக மண் பாதுகாக்கப்பட்டு, தாயகத்தின் வளங்களை முழுமையாகப் பயன்படுத்தி உச்சப் பயன்பாட்டுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்வோம் .
வாருங்கள் உறவுகளே 15 ஆண்டுகளுக்கு முன் யாழ். பல்கலைக்கழக துறைசார் நிபுணர்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட அனர்த்தங்களுக்கான அபிவிருத்தித் திட்டங்களை இனம் காண்பதற்கான ஆய்வு கூட்டத்தில் முல்லைத்தீவு மாவட்ட வளங்கள் இனங்காணப்பட்டு அதனை முழுமையாக பயன்படுத்துவதற்கான திட்டங்கள் இனங்காணப்பட்டு அவை முழுமையாக பயன்படுத்தப்பட்டால் இலங்கையில் உள்ள மாவட்டங்களில் அதிக உற்பத்தியை பெறக்கூடிய மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டம் இருக்கும். ஆனால் இன்று இலங்கையில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வளங்கள் இருந்தும் அதனை முழுமையாக பயன்படுத்தப்படாத மாவட்டங்களில் முல்லைத்தீவு மாவட்டம் முதன்மையாக உள்ளது
விவசாயம், மட்டும் செய்யாது, விலங்கு வேளாண்மை, கடல் வளம் சார்ந்த உற்பத்திகளையும் நாம் அதிக அளவில் மேற்கொள்ள வேண்டும். எனவே பொதுமக்கள் உறவுகள் கொடையாளிகள் தங்களுடைய முழுமையான முயற்சிகளை மேற்கொண்டு எமது தாயக மண் பாதுகாக்கப்பட்டு, தாயகத்தின் வளங்களை முழுமையாகப் பயன்படுத்தி உச்சப் பயன்பாட்டுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்வோம் .
தொடரும்…
- ஜி ல் பீரிஸ் எதற்காக வெளிநாட்டுத் தூதுவர்களை சந்தித்து வருகிறார்! | செவ்வி | ILC | Ilakku
- ராஜபக்சக்களின் அரசாங்கமும், பயங்கரவாதத் தடைச் சட்டமும் – அகிலன்
- அரசின் சர்வாதிகாரப் போக்கும் எகிறிச் செல்கின்ற கோவிட் தேசிய இடர்ப்பாடும் – பி.மாணிக்கவாசகம்
[…] நேற்று இன்று நாளை தாயகத்தின் நீர்வளத… […]