யாழ்ப்பாணத்தில் 50 பேர் உட்பட 69 பேருக்கு வடக்கில் தொற்று

142 Views

யாழ். மாவட்டத்தில் 50 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 69 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூடத்தில் நேற்று 351 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவற்றின் விபரம் வருமாறு,

யாழ். மாவட்டத்தில் 50 பேர் சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 08 பேர், கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 18 பேர், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 14 பேர், யாழ்.போதனா வைத்தியசாலையில் 07 பேர், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் 03 பேர், கிளிநொச்சி மாவட்டத்தில் 03 பேர், உருத்திரபுரம் பிரதேச வைத்தியசாலையில் ஒருவர், அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலையில் ஒருவர், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர், மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் 05 பேர்,

வவுனியா, முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர் ஆகியோர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், முல்லைத்தீவு தனிமைப் படுத்தல் நிலையம் (இராணுவத்தினர்) – 06 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ilakku-weekly-epaper-140-july-25-2021

Leave a Reply