7பேர் விடுதலை குறித்து உச்சநீதிமன்றத்தில் விளக்கம் கேட்கிறாரா தமிழக ஆளுநர்?

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக இருக்கும் பேரறிவாளன் விடுதலை குறித்தும், அதைப்போன்று இந்த விவகாரத்தில் தமிழக அமைச்சரவை எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்தும் அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களில் தமிழக ஆளுநர் முடிவெடுப்பார் என உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா கடந்த 21ஆம் திகதி தெரிவித்திருந்தார். இருப்பினும் அவருக்கு இந்த விவகாரத்தில் முடிவெடுக்க ஒரு வாரம் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதேவேளை  ராஜீவ்காந்தி கொலை வழக்கு விவகாரத்தில் பேரறிவாளன் உட்பட அனைவரையும் விடுவிக்கக்கோரி எதன் அடிப்படையில் கோரிக்கை வைத்துள்ளனர் என்பது புரியவில்லை. இதுகுறித்து நீதிமன்றம் தான் விளக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக ஆளுநர் பதில் மனுவாக தாக்கல் செய்து விளக்கம் கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தமிழக ஆளுநர் தரப்பில் நாளை(27)  உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இதுபோன்ற சூழலில் ஏழு பேர் விடுதலை குறித்த அமைச்சரவை தீர்மானம் குறித்து தமிழக அரசு மீண்டும் ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்குமா அல்லது உச்சநீதிமன்றமே இந்த விவகாரத்தில் தலையிட்டு ஒரு இறுதி உத்தரவை பிறப்பிக்குமா என்பது தெரியவரும்.