சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு முதல் முறையாக சென்ற 4 தனியார் பயணிகள்

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு முதல் முறையாக

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு முதல் முறையாக முற்றிலும் வணிக ரீதியான பயணம் ஒன்று தொடங்கியுள்ளது. இதில் செல்லும் 4 பயணிகளும் 8 நாள்களுக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருப்பார்கள்.

இந்த நான்கு பேரும்  Axiom1 பணியாளர்கள் என்று அழைக்கப்படுவர். ஆக்சியம் என்பது வணிக ரீதியான விண்வெளி பயண நிறுவனம். அடுத்த சில ஆண்டுகளில் தனக்கென தனியாக ஒரு விண்வெளி நிலையத்தை கட்ட இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த நான்கு பேரையும் சுமந்துகொண்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் ராக்கெட் அமெரிக்காவின் கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி 11.17க்கு கிளம்பியது. அவர்கள் நான்கு பேரும்

ராக்கெட்டில் இந்த 4 பயணிகள் இருக்கும் எண்டவர் என்ற குமிழ் சனிக்கிழமை அன்று சர்வதேச விண்வெளி நிலையத்தோடு இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாசாவின் முன்னாள் விண்வெளி வீரரான மைக்கேல் லோபஸ்-அலெக்ரியா தலைமையில் இந்த பயணக்குழு செல்கிறது. இவர் தவிர மற்ற மூவரும் பெரும் பணக்காரர்கள். அவர்கள் தொழில்முறை விண்வெளி வீரர்கள் அல்ல.

நன்றி – பிபிசி