தமிழ்நாடு : ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ஒருங்கிணைக்கும் ‘ஈழத்தமிழர்க்கு விடியல்’ தமிழ் மக்கள் கோரிக்கை மாநாடு இன்று

438 Viewsஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ஒருங்கிணைத்திருக்கும் ‘ஈழத்தமிழர்க்கு விடியல்’ தமிழ் மக்கள் கோரிக்கை மாநாடு, ஏப்ரல் 9ம் நாள் இன்று சனிக்கிழமை மாலை  சென்னையில் நடைபெறவுள்ளது.

ஈழத்தமிழர் தோழமைக் கட்சிகள், அமைப்புக்களைச் சேர்ந்த திரு.பழ.நெடுமாறன், திரு.வைகோ, திரு.தொல் திருமாவளவன், திரு.பொன்னையன், திரு.கே.எஸ்.இராதகிருஸ்ணன், தோழர் அ.சா.உமர் பாருக், தோழர் திருமுருகன் காந்தி, திரு.தி.வேல்முருகன், தோழர் கொளத்தூர் மணி, திரு.உ.தனியரசு, தோழர் கி.வெங்கட்ராமன், தோழர் சுப.உதயகுமார், தோழர் மீ.த.பாண்டியன், போராசிரியர் ராமு மணிவண்ணன், தோழர் சிங்கராயர், தோழர் செந்தில், திரு.இலயோலா மணி, தோழர் கு.இராமகிருட்ணன், தோழர் தியாகு, திரு.பாரிமைந்தன், திரு.அய்யாத்துரை தமிழினியன், திரு.அரவிந்த ஆகியோர் இம்மாநாட்டில் பங்கெடுக்கின்றனர்.

இலங்கைத்தீவினை மையப்படுத்திய இந்தியப் பெருங்கடல் புவிசார் அரசியல் போட்டிக்களம் கூர்மையாகி வரும் வேளையில், நடைபெறும் இம்மாநாடு முக்கியமானதொன்றாக கருதப்படுகின்றது.

Tamil News

Leave a Reply