தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை துப்பாக்கி முனையில் காவல்துறையினர் அச்சுறுத்திய போது அதனை ஒளிப்பதிவு செய்த இருவரை காவல்துறையினர் கைது செய்த நிலையில் அவர்கள் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி சுகாஷ் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த சம்பவத்தில் சட்டத்தை மீறியது காவல்துறையினரே தவிர தமிழ் தேசிய மக்கள் முன்னணியோ அல்லது கைது செய்யப்பட்ட இரு நபர்களோ கிடையாது.
பரீட்சை ஆணையாளரால் வெளியிடப்பட்ட சுற்றுநிரூபத்தில் பாதுகாப்பு அலுவலர்களுக்கு அல்லது காவலர்களுக்கு பாடசாலை வளாகத்தினுள்ளே வெளியாட்கள் பிரவேசிப்பதை கட்டுப்படுத்தவே காவல்துறையினருக்கு அதிகாரம் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாடசாலைக்கு வெளியே உள்ள மைதானத்தில் வைத்து கஜேந்திரகுமார் மாணவர்களுடன் கதைப்பதைத் தடுப்பதற்கோ அல்லது கைது செய்வதற்கோ எந்த அதிகாரமும் காவல்துறையினருக்கு இல்லை என்றார்.