இந்திய கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 1,000 மெட்ரிக்தொன் அரிசி இறக்குமதி

இந்திய கடன் திட்டத்தின் கீழ் அரிசி இறக்குமதி

கடந்த சில நாட்களாக இந்திய கடன் திட்டத்தின் ஊடாக இலங்கைக்கு 1,000 மெட்ரிக்தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அரச வர்த்தகக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

சலுகை விலையில் விற்பனை செய்வதற்காக சுமார் 80,000 மெட்ரிக்தொன் அரிசி இந்திய கடன் திட்டத்தின் ஊடாக இறக்குமதி செய்யப்பட்டதாக இலங்கை அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவரான யோக பெரேரா தெரிவித்தார்.

இறக்குமதி செய்யப்படும் அரிசி லங்கா சதொச மற்றும் நாடு முழுவதும் உள்ள சிறப்பு அங்காடிகள் மூலம் ஊடாக விற்பனை செய்யப்படவுள்ளன.

1 கிலோ பொன்னி சம்பா 175 ரூபாவுக்கும், ஒரு கிலோ நாடு மற்றும் வெள்ளை கெகுலு அரிசி 145 ரூபாவிற்கும் விற்பனைச் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Tamil News