வடகொரியா அதிபராக பதவியேற்று 9 ஆண்டுகளை நிறைவு செய்த கிம்

வடகொரியாவின் அதிபராக கிம் ஜாங் உன் பதவிஏற்று 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை அந்நாட்டு மக்கள் சிறப்பாக கொண்டாடினர்.

வடகொரியாவில் 2011ஆம் ஆண்டு அப்போதைய அதிபர் கிம் ஜொங் இல் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து கடந்த 2012ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி கிம் ஜாங் உன் வடகொரியாவின் அதிபராகப் பதவி ஏற்றார்.

நேற்றுடன் இவர் அதிபராகப் பதவி ஏற்று 9 ஆண்டுகள் நிறைவடைந்தது. இந்நிலையில், அவரின் 9 ஆண்டுகால ஆட்சியைக் கொண்டாடும் வகையில் தலைநகர் பியாங்கியாங்கில் உள்ள அரண்மனையில் புகைப்பட கண்காட்சி நடத்தப்பட்டது. இதில், கிம் ஜாங் உன் இன் சாதனை புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. தனது தந்தை இறந்து 4 மாதத்திற்கு பின்னர் தொழிலாளர் கட்சியின் தலைவராக பதவி ஏற்று இன்றுவரை நாட்டின் பாதுகாப்பினை உறுதிசெய்து வருகிறார் அதிபர் கிம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி வடகொரியாவின் தனியார் செய்தித்தாள் வெளியிட்டுள்ள செய்தியில், “கிம் இன் ஆகச்சிறந்த ஆட்சி முறையால்தான் மக்கள் அமைதியான சூழலில் வாழ்கின்றனர். கொரோனா வைரசிடம் இருந்து மக்களை பாதுகாக்கும் பணியில் அதிபர் கிம் இன் பங்கு ஆகச்சிறந்தது” என்று குறிப்பிட்டுள்ளது.