தென்னாசிய நாடுகளுக்கு உதவ நிதி திரட்டுகிறார் இளவரசர் சார்ள்ஸ்

கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள வறுமையில் வாழும் மக்களுக்கு உதவும் பொருட்டு பிரித்தானியாவின் வேல்ஸ் மாநில இளவரசர் சார்ள்ஸ் நிதி திரட்டும் நடவடிக்கை ஒன்றை நேற்று (24) ஆரம்பித்துள்ளார்.

பிரித்தானியா ஆசிய நிதியம் என்ற அமைப்பினை 13 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பித்த சார்ள்ஸ் தற்போது அதன் ஊடாக நிதியை திரட்டி வருகின்றார். இந்த நிதி இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேசம் மற்றும் சிறீலங்கா ஆகிய நாடுகளில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படவுள்ளது.

அரசு மற்றும் ஏனைய நிறுவனங்களின் உதவியுடன் நாம் இதனை மேற்கொள்ளவுள்ளோம். தற்போதைய நெருக்கடி எல்லா மக்களையும், எல்லா நாடுகளையும் பாதித்துள்ளது. ஆசிய சமூகத்தவர் பிரித்தானியாவின் சுகாதாரத்துறைக்கு சிறந்த பங்களிப்பை நல்கி வருகின்றனர். கடந்த 13 வருடங்களில் நாம் 5 மில்லியன் மக்களுக்கு உதவிகளை வழங்கியுள்ளோம் என சார்ள்ஸ் இந்த திட்டம் தொடர்பில் கருத்து கூறும்போது தெரிவித்துள்ளார்.