டெல்டா பிளஸ் திரிபு மிக வேகமாகப் பரவும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை -வி.கே. பால்

கொரோனா வைரஸின் மூன்றாவது அலை எப்போது இந்தியாவைத் தாக்கும் என்று   கூற முடியாதெனத் தெரிவித்த இந்திய அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக் குழுவின் தலைவர் வி.கே. பால், டெல்டா பிளஸ் திரிபு மிக வேகமாகப் பரவும் என்பதற்கு அறிவியல் ரீதியாக எந்த ஆதாரமும் இல்லை என்றும்  தெரிவித்துள்ளார்.

டெல்டா வைரஸ் காரணமாக தடுப்பூசிகளின் ஆற்றல் குறையும் என்பதும் இதுவரை உறுதிப்படுத்தப்பட வில்லை என்றும் வி.கே.பால் கூறியுள்ளார்.

டெல்டா பிளஸ் திரிபு புதிது என்பதால் அது தொடர்பான ஆய்வுத் தகவல்கள் நமக்கு மிகக் குறைவாகவே இருக்கிறது என்றும் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இரண்டாவது அலையின் வீரியம் சற்று குறைந்திருக்கும் நிலையில் நாளொன்றுக்கு சுமார் 50 ஆயிரம் வரை தொற்று கண்டறியப்படுகிறது.