“பிரான்ஸ் கலவரங்களுக்கு புலம்பெயர் இஸ்லாமியர்கள் காரணமல்ல” – மேக்ரான்

பிரான்ஸில் நடந்த போராட்டங்கள் மற்றும் கலவரங்களுக்கு புலம்பெயர்ந்த இஸ்லாமியர்களே காரணம் என்ற குற்றச்சாட்டு முட்டாள்தனமானது என்று அந்நாட்டின் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸில் விலைவாசி கடுமையாக உயர்ந்ததைக் கண்டித்து அந்நாட்டில் நடத்தப்பட்ட போராட்டங்கள் பின்னர் கலவரங்களாக மாறின. பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுக்கும் இவை வழிவகுத்தன.

இந்த நிலையில், பிரான்ஸில் நடந்த கலவரங்களுக்கு இஸ்லாமிய புலம்பெயர்ந்தோரே காரணம் என்றும்,   பிரான்ஸ் எல்லைகளை மூடி நிலைமை கைமீறிப் போவதற்குள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வாருங்கள் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அதிபர்  இம்மானுவேல் மேக்ரானுக்கு முன்னமே கூறியதாக தெரிவித்திருந்தார். இது தொடர்பில்   வளைகுடாவின் முக்கிய எரிசக்தி விநியோக நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இம்மானுவேல் மேக்ரான், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அதிபரின் கருத்தை மறுத்துள்ளார்.