சீனாவின் தாமதம் – இலங்கைக்கன உதவி கிடைப்பதில் சிக்கல்

அனைத்துலக நாணய நிதியத்தின் நிதி மறுசீரமைப்பு கொள்கைகளை சீனாவின் நடவடிக்கைகள் தாமதப்படுத்துவால் இலங்கைக்கான உதவிகள் கிடைப்பதற்கு மேலும் 6 மாதங்கள் எடுக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளின் அனுசரணையுடன் பொருளாதார மறுசீரமைப்புக்களை மேற்கொள்ள அனைத்துலக நாணய நிதியம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. கடந்த வாரம் இலங்கை வந்த அனைத்துலக நாணயநிதிய அதிகாரிகள் இலங்கை அரசுடன் இரண்டு சுற்று பேச்சுக்களை மேற்கொண்டிருந்தனர்.

சம்பியாவிலும் இவ்வாறே நிகழந்தது, 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அனைத்துலக நாணயநிதியம் பொருளாதார மறுசீரமைப்பை மேற்கொண்டிருந்தது. ஆனால் கடன் வழங்கிய நாடுகளில் ஒன்றான சீனா அனைத்துலக நாணயநிதியத்திற்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்ததால் திட்டம் 7 மாதங்கள் தாமதமாகியது என தெரிவித்துள்ளார் அவுஸ்திரேலியாவின் தேசிய பல்லலைக்கழகத்தை சேர்ந்த பொருளியல் துறை பேராசிரியர் பிரேமாசந்திரா.

எனினும் இலங்கை மீது சீனாவுக்கு கரிசனைகள் உள்ளதால் அது ஜி-20 நாடுகளுடன் ஒத்துழைப்புக்களை வழங்கும். எனவே இலங்கை எதிர்வரும் 6 மாதங்களுக்குள் உதவிகளை பெறக்கூடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.