எரிபொருள் பற்றாக்குறை – மீண்டும் நீண்ட நேர மின்தடை

இலங்கை மின்சார சபைக்கு தேவையான எரிபொருட்களை இலங்கை அரசு வழங்க மறுப்பதால் நாட்டில் மீண்டும் நீண்ட நேர மின் தடை ஏற்படலாம் என இலங்கை மின்சார சபை எச்சரித்துள்ளது.

அது மேலும் தெரிவித்துள்ளதாவது:

எமக்கு நாள்தோறும் 2500 மெற்றிக் தொன் எரிபொருட்கள் தேவை, ஆனால் அரசு 1400 மெற்றிக் தொன்னையே வழங்குகின்றது. இலங்கைக்கு தினமும் 2100 மெகாவற் மின் சக்தி தேவை ஆனால் எம்மால் நீர்வீழ்ச்சி மின் உற்பத்தி மூலம் 1340 மெகாவற்றும், நுரைச்சோலை அனல் மின்நிலையம் மூலம் 600 மெகாவற்றுமே வழங்க முடியும்.

எனவே இலங்கை மீண்டும் மிகப்பெரும் மின்சார நெருக்கடியை எதிர்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.