சீனாவின் கொரோனா தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல்

சீன அரசுக்கு சொந்தமான சீனோஃபார்ம் நிறுவனம் தயாரித்த கோவிட்-19 தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் அவசரகாலப் பயன்பாட்டு அனுமதி வழங்கியுள்ளது.

மேற்கத்திய நாடு ஒன்றால் தயாரிக்கப்படாத தடுப்பூசி ஒன்று உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரத்தை பெறுவது இதுவே முதல் முறையாகும் .

சீனாவிலும் வேறு சில உலக நாடுகளிலும் இந்த தடுப்பூசி ஏற்கனவே கோடிக்கணக்கான மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக ஃபைசர் அஸ்ட்ராஜெனீகா, ஜான்சன் & ஜான்சன் மற்றும் மாடெர்னா ஆகிய தடுப்பூசிகளின் பயன்பாட்டுக்கு மட்டுமே உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் அளித்திருந்தது.

மேலும் சீனா தயாரித்துள்ள இன்னொரு தடுப்பூசியான ‘சீனோவேக்’ குறித்த முடிவு அடுத்து வரும் சில நாட்களில் உலக சுகாதார நிறுவனத்தால் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யாவின் ஸ்புட்னிக்-V தடுப்பூசி ஏற்கனவே உலக சுகாதார நிறுவனத்தால் மதிப்பிடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.