சீனாவின் ஒத்துழைப்பின்றி கடன் வழங்க தயாராகும் IMF

பணவீக்கத்தின் வேகம் கட்டுப்பாட்டுக்குள் காணப்பட்டாலும், சீனாவின் கடன் மறுசீரமைப்பை புறந்தள்ளி இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் கடனை வழங்கினால் உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வழங்கிய கடனை இரண்டு வருடங்களுக்கு மாத்திரமே மறுசீரமைக்க சீனா இணங்கியுள்ள நிலையில், அந்த நாட்டின் உதவியில்லாமலேயே, இலங்கைக்கு அவசர நிதியுதவியை வழங்க, சர்வதேச நாணய நிதியம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

எனினும் இந்த வசதியின்போது, சீனா, சர்வதேச நாணய நிதிய நிதியளிப்பு மற்றும் எந்த மறுசீரமைப்பு ஒப்பந்தத்திலிருந்தும் பயனடையக்கூடும்.

அதே நேரத்தில் மற்ற கடன்வழங்குநர்களை விடவும் கடன் நிவாரணத்தில் குறைவாகவே பங்களிக்கும் நிலை ஏற்படும் என்று அவுஸ்திரேலிய வெளிவிவகாரத்துறை அமைச்சின் நிதியளிப்பில் செயற்படும் தெ இன்டர்பிரிட்டர் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் வழங்கப்போகும் கடன், தற்போதைய பொருளாதார நெருக்கடியின் ஆழமான மனித செலவுகளை மாற்றியமைக்க சிறிதும் உதவாது.

பணவீக்கத்தின் வேகம் கட்டுக்குள் இருந்தாலும் உணவு விலைகள் தொடர்ந்து அதிகமாகவே இருக்கும் என்று அவுஸ்திரேலிய வெளிவிவகாரத்துறை அமைச்சின் நிதியளிப்பில் செயற்படும் தெ இன்டர்பிரிட்டர் இணைத்தளம் குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி, இலங்கைக்கு ஒரு குறிப்பிட்ட அளவு நிதி சுவாசத்தை மட்டுமே உருவாக்கும் என்றும் அந்த இணையம் குறிப்பிட்டுள்ளது.