கோவிட்-19 மனிதர்களால் உருவாக்கப்பட்டதல்ல – அமெரிக்க புலனாய்வுத்துறை

கோவிட்-19 வைரஸ் மனிதர்களால் உருவாக்கப்பட்ட அல்லது மரபணு மாற்றப்பட்ட வைரஸ் அல்ல. அது இயற்கையாக உருகிய வைரஸ் என அமெரிக்காவின் தேசிய புலனாய்வு அமைப்பு நேற்று (30) தெரிவித்துள்ளது.

இந்த வைரஸ் தொடர்பில் நாம் பல உள்ளகத் தகவல்களை பெற்றிருந்தோம், அது தொடர்பில் விரிவாக ஆய்வு செய்தோம். ஆனால் அது ஆய்வுகூடத்தில் உருவாக்கப்பட்டதற்குரிய சான்றுகள் எதுவுமில்லை.

இந்த விடயத்தின் அனைத்துலக விஞ்ஞானிகளின் கருத்துடன் நாம் ஒத்துப்போகின்றோம் என அமெரிக்க புலனாய்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே, இந்த வைரஸ் சீனாவின் வூகான் மாநிலத்தில் உள்ள ஆய்வுகூடத்தில் உருவாக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிறம் நேற்று (30) மீண்டும் தெரிவித்த கருத்துக்கு அமெரிக்க புலனாய்வுத்துறையின் கருத்து எதிர்மறையாக உள்ளதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

US Interligent கோவிட்-19 மனிதர்களால் உருவாக்கப்பட்டதல்ல - அமெரிக்க புலனாய்வுத்துறை