குழந்தைகளுக்கு ஏற்படும் புதிய நோய் -கொரோனா தொற்றால் ஏற்படுகிறதா?

பிரித்தானிய மற்றும் இத்தாலிய மருத்துவ நிபுணர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கும் ஒருவித ஒவ்வாமைக்கு உள்ள தொடர்பை ஆராய்ந்து வருகின்றார்கள்.

இந்த குழந்தைகள் அதிகப்படியான காச்சல் மற்றும் அவர்களின் இரத்த குழாய்கள் வீக்கமடைந்து உள்ள சூழலில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படு வருகிறார்கள்.இத்தாலியில் மருத்துவர்கள் அதிகப்படியான ஒன்பது வயதுக்கு உள்பட்ட சிறுவர்களுக்கு மருத்துவமணையில் சிகிச்சைஅளிப்பதாகவும், இது ஆசியாவில் காணப்படும் கவஸாகி நோய் போன்று தோற்றமளிப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

பிரித்தானியாவில் இவ்வாறான அறிகுறிகளுடன் குழந்தைகள் மருத்துவமனைக்கு வருவதால் இன்றய கொரோனா வைரஸ் தொடர்பான உரையில் பிரித்தானிய சுகாதர அமைச்சர் இந்த விடயம் மிகவும் கவலையளிப்பதாகவும் மருத்துவ அதிகாரிகள் இதை ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.கவாஸாகி நோய் எவ்வாறு உருவாகின்றது என்பதை இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை, இந்த நோயால் பொதுவாக ஐந்து வயதுக்கு உற்பட குழந்தைகைகள் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த நோயால் பதிக்கப்படுவோர் அதிகமான காச்சல், தோலில் ஏற்படும் சிரங்கு அல்லது சொறி, வீக்கமடைந்த சுரப்பிகள் மற்றும் இந்த நோய் தீவிரமடைந்தால்
இதய நாளங்களும்,தமணிகளும் வீக்கமடைந்து காணப்படும்.

இங்கிலாந்தின் மருத்துவ இயக்குனர் ஸ்டீபன் போவிஸ் தெரிவிக்கையில் இப்படிப்பட்ட அறிகுறிகளுடன் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதை சில நாட்களாக கவனிப்பதாகவும், ஆனால் இந்த நோய்க்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கும் உள்ள தொடர்பை இப்பொழுதுஉடனடியா உறுதி செய்ய முடியாது என்று தெரிவித்தார்.

நன்றி: சிவரஞ்சன்