கண்மூடித்தனமான தேசபக்தி: சிரிய அகதியின் செய்தி

“நீங்கள் ஒரு தேசபக்தர் என்றால், உண்மையான தேசபக்தி நாட்டை சிறந்ததாக மாற்றுவதில் இருக்க வேண்டும். அதற்கு, நீங்கள் விமர்சனத்தை ஏற்றுக்கொண்டு தவறுகளை திருத்த வேண்டும். கண்மூடித்தனமாக தேசபக்தி என்பது உங்கள் நாட்டை விற்பதாகும், அதிகாரிகளின் தவறுகளை மீறி அவர்களை காப்பதாகும். உங்களை விமர்சிக்கும் அனைவரும் உங்களை வெறுப்பதில்லை. மலேசிய மக்களுக்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன். உங்கள் நாடு அழகானது, நீங்களும் சிறந்தவர்கள். ஆனால் உங்கள் அதிகாரிகள் அப்படி கிடையாது,” என Hassan Al-Kontar எனும் சிரிய அகதி கூறியிருக்கிறார்.

2018ம் ஆண்டு மலேசிய விமான நிலையத்தில் அந்நாட்டு அதிகாரிகளால் பல்வேறு இன்னல்களுக்கும் அதன் தொடர்ச்சியாக விமான நிலையத்திலேயே அவர் தங்கும் நிலையும் ஏற்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.