உலகின் மிகப் பெரிய அணை உடையும் நிலையில், 4கோடி பேர் உயிரிழக்கும் அபாயம்

சீனாவிலுள்ள, உலகின் மிகப் பெரும் அணையாகக் கருதப்படும் த்ரீ கார்ஜஸ் அணை உடையும் அபாயத்தில் உள்ளதாகக் கூறப்படுகின்றது. சீனாவில் 40 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாகவே இந்த அணை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த அணை உடைந்தால் வூஹான் மாகாணமே மூழ்கும் என்றும் கூறப்படுகின்றது.

2012ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த அணையை கட்டுவதற்கு 10 இலட்சம் மக்களின் வீடுகள், நிலங்கள் அபகரிக்கப்பட்டன. 1000 சரது கிலோமீற்றர் தேக்கப் பகுதியைக் கொண்ட இந்த அணை,  நிரம்பும் நிலையில் இருப்பதல், அதிலிருந்து மேலதிக நீர் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நீரில் பல கிராமங்கள் மூழ்கியுள்ளன. மேலும் வெள்ளத்தைக் கட்டுப்படுத்த அணையில் சிறு சிறு பகுதிகள் உடைக்கப்பட்டு வருகின்றது.

China dam1 உலகின் மிகப் பெரிய அணை உடையும் நிலையில், 4கோடி பேர் உயிரிழக்கும் அபாயம்தற்போது பெய்து வரும் மழை 10 நாட்கள் தொடர்ந்து நீடித்தால், உலகின் மிகப் பெரிய அணை உடைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அப்படி நடக்கும் பட்சத்தில் அணையிலிருந்து 100 மீற்றர் உயரத்திற்கு செல்லும் தண்ணீர் 5 நகரங்களை முழுவதுமாக மூழ்கடித்து விடுவதுடன், காடுகளை அழித்து இறுதியாக வூஹான் நகரத்தில் 20 – 30 அடி உயர வெள்ளமாக நுழைந்து அந்நகரத்தையே நிலகுலையச் செய்து விடும். அத்துடன் 4கோடி பேர் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.