எலிசபெத் மகாராணியின் மாளிகை அருங்காட்சியகமாகிறது

பிரிட்டன் மகாராணி எலிசபெத், மால்டா தீவில் 3 ஆண்டுகள் வாழ்ந்த மாளிகையை அருங்காட்சியகமாக மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

1949ஆம் ஆண்டு முதல் 1951ஆம் ஆண்டு வரை மத்திய தரைக்கடலில் உள்ள மால்டா தீவில் உள்ள மாளிகையில் பிரிட்டன் மகாராணி எலிசபெத் வசித்து வந்தார். திருமணமான புதிதில் அவர் தனது கணவர் பிலிப்புடன் இந்த மாளிகையில் வசித்தார். அவர் சென்ற பின்னர் பராமரிப்பின்றி இருந்த இந்த மாளிகையை சுமார் 44 கோடி ரூபாய்க்கு வாங்கிய மால்டா அரசு அதனை 88 கோடி ரூபா செலவில் புனரமைப்பு செய்யவுள்ளது.

Queen elesabath எலிசபெத் மகாராணியின் மாளிகை அருங்காட்சியகமாகிறதுபுனரமைப்பு செய்யப்பட்ட பின்னர் இந்த மாளிகையை அருங்காட்சியகமாக மாற்ற மால்டா அரசு முடிவு செய்துள்ளது. பிரிட்டன் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் இந்த முடிவை மால்டா அரசு எடுத்துள்ளது.