அமெரிக்க கடற்படை அதிகாரிகளுக்கு ஈரான் எச்சரிக்கை!

168 குழந்தைகளை கொன்ற உங்களை விடமாட்டோம்: அமெரிக்க கடற்படை அதிகாரிகளுக்கு ஈரான் எச்சரிக்கை

ஏவு​கணைகளை வீசி பள்​ளிக் குழந்​தைகள் 168 பேரைக் கொன்ற அமெரிக்க கடற்​படை அதிகாரி​களை சும்மா விட​மாட்​டோம் என ஈரான் எச்​சரிக்கை விடுத்​துள்​ளது.

கடந்த பிப்ரவரி 28-ம் திகதி ஈரான் மீது அமெரிக்கா​வும் இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்​வழித் தாக்​குதலை தொடங்​கின. இந்​தத் தாக்​குதலில் ஈரானின் உச்ச தலை​வர் அயத்​துல்லா அலி கமேனி கொல்​லப்​பட்​டார்.

அதே நாளில், ஈரானின் மினாப் நகரில் உள்ள தொடக்​கப் பள்ளி மீது தோமாக் ஏவு​கணைத் தாக்​குதல் நடத்​தப்​பட்​டது. இதில் 168 குழந்​தைகள் உயி​ரிழந்​தனர். இந்​தத் தாக்​குதலுக்கு 2 அமெரிக்க கடற்​படை அதி​காரி​கள்​தான் காரணம் என்​றும் அவர்​களை சும்​மாவிட மாட்​டோம் என்​றும் ஈரான் ஏற்​கெனவே எச்​சரிக்கை விடுத்திருந்​தது.

இந்​நிலை​யில், தென்​னாப்​பி​ரிக்​கா​வில் உள்ள ஈரான் தூதரகம் நவம்​பர் 14-ம் திகதி சமூக ஊடகங்​களில் அந்த 2 அமெரிக்க அதிகாரி​களின் பெயர்​களைக் குறிப்​பிட்டு, அவர்​களின் புகைப்படங்களை வெளி​யிட்​டுள்​ளது. அத்​துடன், “நாங்​கள் உங்களைக் கண்​டு​பி​டிப்​போம்” என்று நேரடி எச்​சரிக்கை விடுக்கப்​பட்​டுள்​ளது.