உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் புதிய திருப்பம்!

2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் விசாரணையில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இலங்கை இராணுவத்தின் வவுனியா பிரிவிடமிருந்த புலனாய்வுத் தகவல்கள் அடங்கிய குறிப்பேடு ஒன்றைக் கைப்பற்றிய அதிகாரிகள், அதை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

இந்த ஆவணத்திற்குப் பொறுப்பாக இருந்த லெப்டினன்ட் கேர்ணலிடம் ஏற்கனவே வாக்குமூலம் பெறப்பட்டுள்ள நிலையில், அதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் குறித்து விரிவான விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் கைதாகியுள்ள முன்னாள் காவல்துறை புலனாய்வு அதிகாரிகளான யாசீன் பாவா, ஜெகில் பாஸ் மற்றும் சரத் சமந்த ஆகியோரை எதிர்வரும் செப்டம்பர் 2ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டார்.