ஈரானின் தாக்குதல்; அமெரிக்க படையினருக்கு மூளை அதிர்ச்சி

ஈராக்கில் உள்ள அல் அசாத் விமான தளத்தில் ஈரான் கடந்த வாரம் தாக்குதல் இத்தாக்குதலில் யாரும் கொல்லப்படவில்லை என்றும் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் அமெரிக்கா கூறி வந்த நிலையில் நிலையில் தற்போது தனது படையினர் 11 பேருக்கு மூளை அதிர்ச்சி அறிகுறிகள்(concussion symptoms) காணப்பட்டதாகவும் அவர்களுக்கு தற்போது சிகிச்சை அழைக்கப்பட்டு வருவதாகவும் அந்த நாடு தெரிவித்துள்ளது.

ஈரான் படையின் தளபதி காசிம் சுலைமானைக் கடந்த 3-ம் தேதி பாக்தாத் விமான நிலையத்தில் அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணை வீசிக் கொன்றது. இந்தத் தாக்குதலில் காசிம் சுலைமான், அவரின் மருமகன் முகந்தியாஸ் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்காவை பழிக்குப் பழி வாங்குவோம் என்று ஈரான் அரசு சூளுரைத்துள்ளது.

இந்தச் சூழலில் ஈராக்கில் பாக்தாத் அருகே இருக்கும் ‘அன் அல் ஆசாத்’ மற்றும் ‘ஹாரிர் கேம்ப்’ ஆகிய விமான தளங்களைக் குறிவைத்து ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.